என் மலர்
வேலூர்
- குடியாத்தத்தில் அதிகாலை 2 மணியளவில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
- திருவண்ணாமலை, செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக மேல இருக்கு சுழற்சி காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், தொரப்பாடி, பாகாயம், கொணவட்டம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
காட்பாடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் காலதாமதமாக கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையாததால் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீருடன் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
குடியாத்தத்தில் அதிகாலை 2 மணியளவில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அண்ணாமலை தெரு, ராஜாஜி தெரு காட்பாடி ரோட்டில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
பாக்கம் கிராமத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது. சூறை காற்றால் பாக்கம், சேம்பள்ளி, உப்பரப்பள்ளி தட்டப்பாறை, பரதராமி, சைனகுண்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது.
உப்பரப்பள்ளி கிராமத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோவில் இடிந்தது. சாலையில் சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. அறுவடைக்கு தயாராகி இருந்த சுமார் 1200 ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்தது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
வேலூர் 21.8, காட்பாடி 23, குடியாத்தம் 52, பேர்ணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43, பொன்னை 19.
- மரம் விழுந்து கோவில் இடிந்தது
- போக்குவரத்து பாதிப்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் சுற்றுப்புற கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
அப்போது வேகமான சூறாவளி காற்று வீசியது. அப்போது மின்தடை ஏற்பட்டது சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் குடியாத்தம் நகரில் காட்பாடி ரோட்டில் பல மரங்களும் நகரின் முக்கிய பகுதிகளான கொச அண்ணாமலை தெரு, ராஜாஜிதெரு உள்ளிட்ட தெருக்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது.
காமராஜர் பாலத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து நள்ளிரவே தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் பி.மேகநாதன், எம்.எஸ். குகன் உள்பட நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் காட்பாடி ரோட்டில் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி சாலையில் சாய்ந்த ராட்சத மரங்களை அகற்றினார்கள். மேலும் சாலையில் சரிந்து கிடந்த மின் கம்பங்களை ஒதுக்கி வைத்தனர்.
அதேபோல் கொச அண்ணாமலை தெரு, ராஜாஜி தெரு பகுதியில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முன்னிலையில் அகற்றினார்கள்.
அதேபோல் குடியாத்தம்- சித்தூர் செல்லும் சாலையில் பாக்கம் பகுதியில் சாலையின் நடுவே இரு பக்கத்திலும் இருந்த ஏராளமான புளிய மரங்கள் சாய்ந்தன பாக்கம் கிராமத்தில் 15-க்கும் அதிகமான வீடுகளில் மீது மரங்கள் சாய்ந்தன.
பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 4 மரங்கள் சாய்ந்து சுற்று சுவரை சேதப்படுத்தியது. ஏராளமான மின்கம்பங்களை சாய்த்தது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நள்ளிரவே விரைந்து வந்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்பட மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் பல மணி நேரம் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்களையும் மின்கம்பிகளையும் கடும் சிரமத்திற்கிடையே கொட்டும் மழையில் அப்புறப்படுத்தினர்.
அதேபோல் குடியாத்தம் பலமநேர் சாலையில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றினார்கள். 4 மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது, குடியாத்தம் சித்தூர் சாலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் திரும்பிய திசையெல்லாம் மரங்களும் சாய்ந்தும், வீடுகளுக்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கனமழையால் குடியாத்தம் ஒன்றிய பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
கோவில் இடிந்தது
குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோவில் இடிந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஒரு மணி நேரம் கொட்டிய சூறை காற்று கனமழையால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை மின்சாரம் வர இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் சில கிராமப்புற பகுதிகளில் சில நாட்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
வேலூர்
வேலூரில் நேற்று இரவு சுமார் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, சாய்நாதபுரம், சங்கரன் பாளையம், தொரப்பாடி, பாகாயம், கொணவட்டம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மழை அளவு. மி.மீட்டரில் வருமாறு:-
வேலூர் 21.8, காட்பாடி 23, குடியாத்தம் 52, பேர்ணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43, பொன்னை 19.
குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் தென்னை மரங்களை வைத்துள்ளனர். மேலும் வாழை மரங்களும் நெற்பயிர்களும், மா மரங்களும் ஏராளமாக உள்ளன இன்று அதிகாலை அடித்த சூறைக்காற்றால் பாக்கம், சேம்பள்ளி, உப்பிரபல்லி, தட்டப்பாறை, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. ஏராளமான மாமரங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது இந்த மழையால் பல லட்சம் ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது.
- யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
- ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர், காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது 38). உதவி மேலாளராக வேலை செய்து வந்தார்.
அவர் காட்பாடி வி.ஜி. ராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
இதனால் இவரது வங்கியில் கல்வி கடன் வாங்கியவர்கள் செலுத்திய பிரிமியம் பணத்தை மோசடியாக கணக்கு எழுதி இவரது கனரா வங்கி மற்றும் பரோடா வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் 2021 ஜூலை மாதம் வரை மொத்தம் 137 வாடிக்கையாளர்களின் வங்கி பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.
வங்கி கணக்கில் பிரிமியம் தொகை செலுத்தியவர்களுக்கு பணம் வராததால் இது குறித்து வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர். வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யோகேஸ்வர பாண்டியன் ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் சிவகுமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சாரதி இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 44) மாற்றுத்திறனாளி. இவரால் முடிந்த வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
நேற்று மாலை அவரது 3 சக்கர பைக்கில் வேலப்பாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
பைக் ஓட்டியபடியே அவர் இறந்ததால் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் பைக் மோதி நின்றது.
இதனை கண்ட பொதுமக்கள் ஓடிச் சென்று அவரை மீட்டனர். அப்போதுதான் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எம்.எல்.ஏ., மேயர் பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட மாதாகோவில்தெரு திரு.வி.க.நகர், மூலக் கொல்லை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ரங்காபுரத்தில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
மூலக்கொல்லை பகுதியில் புதியதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மூலக் கொல்லை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் பூமா, கவுன்சிலர்கள் சுதாகர், கணேஷ்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேசன் கடைகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
அதன்படி ரங்காபுரத்தில் உள்ள கடையில் 1,521 அட்டைதாரர்கள் இருந்தனர். அதில் 521 அட்டைதாரர்கள் மூலக்கொல்லை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அவர்களின் வசதிக்காக மூலக்கொல்லை பகுதியில் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் பெண்கள் பணிபுரிய உள்ளனர்.
இதே போன்று மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 33 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 732 ரேசன் கடைகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏரானமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றவர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் சத்தியானந்தன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் பானுமதி வரவேற்று பேசினார். முன்னாள் மாநில தலைவர் சுதாகரன் மாநில துணை செயலாளர் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர்.மாவட்ட செயலாளர் குப்புராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமத்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசிய கல்விக் கொள்கைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே ஒரு கொள்கை என்ற 7-வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முழுமையாக பெரும் வகையில் அரசு நேரடியாக அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளாலும் ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களாலும் தொல்லைக்கு ஆளாகி பாதுகாப்பு பெற்ற நிலையில் உள்ளனர் டாக்டர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
- குடியாத்தத்தில் தமிழக் கனவு நிகழ்ச்சி நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டத்தில் மாபெரும் தமிழக் கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அகமே அழகு என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, அரை நூற்றாண்டு ஆட்சியும் அசுரவேக வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஊடகவி யலாளர் செந்தில்வேல் ஆகியோர் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
தமிழை கட்டாயமாக நாம் வளர்க்க வேண்டும். தமிழ்மொழி என்பது வரலாற்று கணக்கிட்டு முறைப்படி பார்த்தால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ் மொழி பயன்பாட்டில் இருந்தது. தொல்காப்பியர் தமிழை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என வகைப்படுத்தினார்.
3 ஆயிரம் ஆண்டுக ளுக்கும் முன்பு தமிழை இவ்வாறு வகைப்படுத்தி எழுதுவதற்கு ஒரு நல்ல சிந்தனை இருந்துள்ளது. நமது கனவு என்பது பழமையான, தொன்மை யான தமிழ் மொழியை எத்தனையோ ஆண்டுகளாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் நாம் இன்றைக்கு உள்ளோம். ஆகவே நாம் கனவு காண வேண்டும்.
தமிழ் மொழியை நாம் கற்க வேண்டும்.தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. இக்காலகட்டத்தில் பேனா, கரும்பலகை, சாக்பீஸ், அழிப்பான் போன்றவை உள்ளது.ஆனால் அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதினார்கள்.
அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது.நமக்கு பின்னால் வரும் தலைமுறையினர் இவற்றை படித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது.
ஆகவே இந்த கணிப்பொறி காலத்தில் நமக்கும் கனவு வேண்டும். தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடியாத்தம் சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை பகுதியில் புதிதாக 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டும் பணிகள், சுண்ணாம்புப்பேட்டை புங்கனூர் அம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள், தங்கம்நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு 5 லட்சம் ரூபாயில் கட்டும் பணிகளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, கன்னிகாபர மேஸ்வரி, ராணிபாஸ்கர், என்.கோவிந்தராஜ், நவீன்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு அனைவ ரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடை கட்டும் பணிகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கல்வெட்டு கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- குடியாத்தம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
- ஆந்திரா கும்பலை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாபுரம் கிராமம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளது.
இதன் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தமிழக எல்லை யோரம் உள்ள வனப்பகுதியில் பல்லாயிர கணக்கான அழுகிய வாத்து முட்டைகளை விசி செல்கின்றனர்.
இந்த அழுகிய முட்டைகளை வனப்பகுதியில் ஒட்டியுள்ள மான் முயல் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு பாதிப்படைந்து உள்ளன.
பொதுமக்கள் அவ்வழி யாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக சுவாச கோளாறு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக எல்லையோரம் உள்ள சோதனை சாவடியில் வாகனங்களை முழுமை யாக சோதனை செய்து பிறகு அனுமதிக்க வேண்டும். அழுகிய நிலையில் உள்ள முட்டைகளை வீசி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- எருது விடும் விழா நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணி
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி, சீலேரி கிராமத்தில் பொன்னி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது.
இதில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு இருந்தனர். வாடிவாசலில் இருந்து காலை 10 மணி முதல் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் வழிமறித்து நின்று இருந்ததால் பல காளைகள் வழி தெரியாமல் ஓடுப்பாதையில் இருந்த இளைஞர்களை தூக்கி வீசி சென்றனர்.
இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனையடுத்து பகல் 2 மணிக்கு காைள விடும் விழா முடிவடைந்தது. முதல் பரிசாக ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணகரன், அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பணிகளுக்கு டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.
- வாணியம்பாடியில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர்:
பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் பேசினார். அப்போது தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் 18 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி விவரம் எவ்வளவு?
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நிலையங்களைத் தவிர மேலும் பல நிலையங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலைய சந்திப்பு ஆகியவற்றின் நவீனமயமாக்கல் மற்றும் மறுவடிவமைப்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை மற்றும் முடிவடையக்கூடிய தோராயமாக எப்போது முடியும்?
சென்னையில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம் ரெயில் நிலையங்களில் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர், காட்பாடி, தாம்பரம், டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல், ஆவடி, சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம் ஜே.என், செங்கல்பட்டு ஜே.என்., கிண்டி, பெரம்பூர், அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுண்ட், கூடுவாஞ்சேரி, திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை நிலையங்களின் நவீனமயமாக்கல் மேம்படுத்துதல் மேம்பாடு என்பது போக்குவரத்தின் அளவு, பணிகளுக்கு இடையேயான முன்னுரிமை மற்றும் நிதி இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும்
சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பணிகளுக்கு டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.
ரெயில் நிலையங்களின் மேம்பாடு மறுவளர்ச்சி மேம்படுத்துதல் என்பது பயணிகள் மற்றும் ரெயில்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான அம்சங்கள் கொண்டது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு சட்டரீதியான அனுமதிகள் தேவை எனவே பனிகள் முடிவடைவதில் காலக்கெடு எதுவும் குறிப்பிட முடியாது.
சென்னையின் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்கள் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டை புறநகர் கிரேடு 3 ரெயில் நிலையம் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கு ஏற்ப அனைத்து குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
- 3 இடங்களில் உள்ள 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
- மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் வியாபாரிகள் இன்று மேயர் சுஜாதாவிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் அண்ணா சாலையில் பழைய மாநகராட்சி எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான ஏ கே எம் சி வணிக வளாகம் உள்ளது. இதேபோல வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்பென்ட்ரி ரோடு பகுதியில் மாநகராட்சி சொந்தமான கடைகள் உள்ளன.
இதில் வாடகைக்கு உள்ள வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்த வில்லை இதனால் அடுத்து இந்த 3 இடங்களில் உள்ள 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் இந்த கடைகளுக்கு வருகிற 28-ந் தேதி ஏலம் நடைபெறும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடைகள் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மாநகராட்சி இந்த கடைகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டும்.
கடைகள் ஏலம்விடப்படுவதன் மூலம் வியாபாரிகள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும். மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






