என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அருகே கொட்டப்பட்டுள்ள அழுகிய வாத்து முட்டைகள்.
கிராமப் பகுதியில் ஆயிரக்கணக்கான அழுகிய வாத்து முட்டைகள் வீச்சு
- குடியாத்தம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
- ஆந்திரா கும்பலை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாபுரம் கிராமம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளது.
இதன் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தமிழக எல்லை யோரம் உள்ள வனப்பகுதியில் பல்லாயிர கணக்கான அழுகிய வாத்து முட்டைகளை விசி செல்கின்றனர்.
இந்த அழுகிய முட்டைகளை வனப்பகுதியில் ஒட்டியுள்ள மான் முயல் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு பாதிப்படைந்து உள்ளன.
பொதுமக்கள் அவ்வழி யாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக சுவாச கோளாறு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக எல்லையோரம் உள்ள சோதனை சாவடியில் வாகனங்களை முழுமை யாக சோதனை செய்து பிறகு அனுமதிக்க வேண்டும். அழுகிய நிலையில் உள்ள முட்டைகளை வீசி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.