என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண்கள் மட்டுமே பணியாற்றும் ரேசன் கடை திறப்பு
  X

  வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லையில் ரேசன் கடையை கார்த்திகேயன் எம் எல் ஏ ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா.

  பெண்கள் மட்டுமே பணியாற்றும் ரேசன் கடை திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எம்.எல்.ஏ., மேயர் பங்கேற்பு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  வேலூர்:

  வேலூர் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட மாதாகோவில்தெரு திரு.வி.க.நகர், மூலக் கொல்லை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ரங்காபுரத்தில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

  மூலக்கொல்லை பகுதியில் புதியதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

  இந்த நிலையில் தற்போது மூலக் கொல்லை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் பூமா, கவுன்சிலர்கள் சுதாகர், கணேஷ்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி கூறியதாவது:-

  வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேசன் கடைகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

  அதன்படி ரங்காபுரத்தில் உள்ள கடையில் 1,521 அட்டைதாரர்கள் இருந்தனர். அதில் 521 அட்டைதாரர்கள் மூலக்கொல்லை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.

  அவர்களின் வசதிக்காக மூலக்கொல்லை பகுதியில் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் பெண்கள் பணிபுரிய உள்ளனர்.

  இதே போன்று மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 33 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 732 ரேசன் கடைகள் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×