என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆடு மேய்க்க சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா கணவனை இழந்த இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவது மகன் சாலமோன் (வயது 39), திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில், சாலமோன் நேற்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க அவருடைய உறவினர் டேனியல் என்பவரின் மாந்தோப்பிற்கு சென்றார்.

    அப்போது அங்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் சுமார் 10 அடி தூரமுள்ள வயலில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    அவரது தாயார் சுசீலா அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சென்று தேடி பார்த்துள்ளார்.

    சந்தேகப்பட்டு ஆடு மேய்க்க சென்ற இடத்திற்கு சென்றார். அருகே உள்ள வயலில் தனது மகன் அசைவற்று கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாலமோனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நாகநதி உறை கிணறுகள் குறித்து பேசினார்
    • பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு பாராட்டு

    வேலூர்:

    பிரதமர் மோடியின் மன் பாத் எனும் மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி நேரடியாக பேசியது வேலூர் மாவட்டத்தில் 700 இடங்களில் ஒலிபரப்பப்பட்டது.

    மாநகராட்சி பகுதியில் 100 இடங்களில் ஒலிபரப்பினர். சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன், கவுன்சிலர் சுமதி மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன், எஸ்.எல்.பாபு, மாவட்ட அலுவலக செயலாளர் கலந்து கொண்டனர்.

    மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாகநதி ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    கணியம்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் மழைக்காலங்களில் நாகநதி ஓடைகளில் வரும் நீர் ஆவியாவதை தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய உறை கிணறுகள் 354 இடங்களில் அமைக்கப்பட்டது.

    இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதனால் கோடையிலும் இப்பகுதியில் நெல், வாழை போன்ற தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் பெண்கள் மற்றும் வாழும் கலை அமைப்பினரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.

    இந்த நாகநதி ஆற்றில் வற்றாத ஜீவ நதியாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது. பணியில் சிறப்பாக ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவருக்கும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • டெபாசிட் தொகை குறைக்க வலியுறுத்தல்
    • ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயம்

    வேலூர்: 

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 85 கடைகள் உள்ளன. தாய்மார்கள் உணவளிக்கும் அறை, பணியாளர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக 10 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 75 கடைகள் வணிக நோக்கத்திற்காக உள்ளன.

    கடந்த வாரம் கடைகள் ஏலம் விடப்பட்டதில் 8 கடைகள் மட்டுமே எடுக்கப்பட்டன.4 கடைகள், தரை தளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. திருநங்கைகளுக்கும் ஒரு கடை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கடைகளுக்கு டெபாசிட் தொகை ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மொத்த பரப்பளவை பொறுத்து டெபாசிட் இருக்கும். தரை தளத்தில் உள்ள கடைகளில் அதிக டெபாசிட் விகிதம் உள்ளது. லாப வரம்பு குறைவாக இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதியதால் ஏலத்தில் பங்கேற்க வில்லை.

    "கடைகளுக்கான டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    டெபாசிட் தொகையைக் குறைப்பது, நகராட்சி நிர்வாகத்தின் சிறப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், 2 வாரங்களுக்குப் பிறகு, கடைகளை மீண்டும் ஏலம் விடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் பணிகளை தேர்வு செய்யலாம்
    • மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன

    வேலூர்:

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் ஊரகப் பகுதிகளில் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.

    இந்த நிதியாண்டில் 115 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், 10 கழிவுநீர் இணைப்பு பணிகள், 7 சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2 கழிவுநீர் சிமெண்ட் கால்வாய்கள், 2 குடிநீர் குழாய் பணிகள், 2 பேருந்து நிழற்குடை பணிகள், 1 தார் சாலை, 1 பேவர் பிளாக் அமைக்கும் பணி, 1 அரசு பள்ளிக்கு மேஜை நாற்காலி கொள்முதல், 1 நியாய விலை கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் 147 திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன.

    பணிகள் பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. இதில் ரூ.8.07 கோடி நிதி அரசு பங்களிப்பாகவும், ரூ. 2.28 கோடி தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள படுகின்றது.

    தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டப் பணிகளை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    • பைக்கில் இருந்து விழுந்தவர் மீது கார் மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன்பே ட்டையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 34).

    இவர் நேற்று பள்ளிகொண்டா நோக்கி பைக்கில் சென்றார். அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் அவரது பின்னால் வந்த கார் பாலாஜி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தார் .

    விரிஞ்சிபுரம் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வி.ஐ.டி.யில் நடந்த விழாவில் பழ.நெடுமாறன் பேச்சு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் விஐடி பல்கலைக்கழகம், நாவலர்- செழியன் அறக்கட்டளை இணைந்து நடத்திய இரா. செழியன் நூற்றாண்டு விழா வி.ஐ.டி.யில் நேற்று நடந்தது.

    விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    காலம் கடந்தாலும் நாவலரையும், செழியனையும் மறக்க முடியாது. 1985-ம் ஆண்டு விஐடிக்கு அடிக்கல் நாட்டியதே நாவலர் தான். இது வளர்ந்து தற்போது இங்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 4 கேம்பசிலும் 80 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். இந்த பெருமையெல்லாம் எம்.ஜி.ஆரையே சேரும்.

    நாவலருடன் 40 ஆண்டு, செழியனுடன் 50 ஆண்டு என்று பழகிய வாய்ப்பு எனக்கு இருந்தது. இருவரையும் நினைக்கும் போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆற்காடு சகோதரர்கள் ஏ.ராமசாமி, ஏ.லட்சுமணசாமி போன்ற புகழை பெற்றவர்கள் நாவலர் சகோதரர்கள். 2011-ல் இங்கு வந்த செழியன், மறையும் வரை இங்குதான் இருந்தார். அர சியலில் நேர்மையையும், தூய்மையையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் பணியாற்றினார்.

    அப் போது அவரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மதித்ததை பார்க்கும்போது அவருக்கு நிகராக ஒரு எம்பி யாரும் இத்தனை ஆண்டுகளில் வந்ததில்லை. மக்களவையாகட்டும், மாநிலங்களவையாகட் டும், யாருடைய மனமும் நோகாமல் பேசுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது:-

    நாவலர் நெடுஞ்செழியனின் எத்தனையோ சிறப்புகளை விட, சட்டமன்ற ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்துவதில் முன்னிலையில் நின்றார்.

    அவையின் முன்னவராக, சட்டமன்ற மரபுகளில் இருந்து யாரும் விலகுவதை ஒருபோதும் அனும திப்பதில்லை. அதன் மூலம் சட்டமன்ற ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்தினார்.

    அதேபோல் அவரது இளவல் செழியனும் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கம் வகித்தபோது நாடாளு மன்ற மரபுகளை நிலைநிறுத்துவதில் பாடுபட்டார்.

    இங்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லோரும் கூடியிருந்து செழியனை நினைவுகூர்ந்து பாராட்டுவது என்றால், இவை அத்தனையும் கட்சி அரசியலை கடந்து அவர் எவ்வளவு பெரிய மதிப்பை பெற்றுள்ளார் என்பதை அறியலாம்.

    மக்கள் தொண்டு என்று வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண் டும் என்ற உன்னதமான கோட்பாட்டை நாவலரும், அவரது இளவல் செழியனும் கடைபிடித்தார்கள்.

    அமைச்சர் பதவி ஏற்றவர்கள் நாட்டுக்கும், மக்ககளுக்கும் அமைச்சர் என்பது இல்லை. இந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் என்று தான் சொல்லுகிறார்கள் என்று ஒருமுறை செழியன் வேதனையாக சொன்னார்.

    செழியன் நாடாளு மன்றத்தில் ஆற்றிய சிறப்புகளை இங்கு சொன்னார்கள். குறிப்பாக 1975-ம் ஆண்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் சிறைபடுத் தப்படுகிறார்கள்.

    ஆனால் அன்று செழியனையும் சிறை பிடிக்க வேண்டும் என்று பெருமுயற்சியை அரசு எடுத்தது. அதில் தப்பி எப்படியோ நாடாளுமன்றத்தில் புகுந்து ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்க உரையாகும்.

    இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் உணர இங்கு வெளியி டப்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், எச்.வி. ஹண்டே, திண்டுக்கல் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா, முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன், நீலா குழந்தை வேலு, விமலா சுப்பையா, அமெரிக்க டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம், வி.ஐ.டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அரங்க சுப்ரமணியம் தமிழில் மொழிபெயர்த்த இரா. செழியனின் மக்களுக்கான நாடாளுமன்றம் என்ற நூலை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட அதனை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே பெற்றுக்கொண்டார்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேச்சு
    • உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது

    குடியாத்தம்:

    குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் என்ற தன்னார்வ அமைப்பு இணைந்து விழுதுகளை வேர்களாக்க என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மக்கள் மறுமலர்ச்சி தடம் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் வாழ்த்துரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் விஜயகுமார், மன்னர்மன்னன் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் விஜயகுமார், முரளிதரன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் தனி வட்டாட்சியர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    முன்னதாக உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு கல்விக்காக அதிக முக்கியத்துவம் தந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது ஒரு நாடு முன்னேற கல்வி மருத்துவம், தொழில் துறை முன்னேற்றம் இருக்க வேண்டும். அதுபோல் தமிழ்நாடு அரசு மக்கள் நலஅரசு இந்த 3 துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாணவர்கள் கல்வி கற்க வறுமை தடை இல்லை மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் உள்ளன.

    அவர்கள் உயர் கல்வி படிக்க பல்வேறு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்திக் கொண்டு வருகிறது. மாணவர்கள் அந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என்னென்ன படிப்புகள் உள்ளன அந்த படிப்புகளை படித்த பின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி போட்டியான இந்த உலகத்தில் வேலை வாய்ப்பு பெற வேண்டும் முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கவலைப்படக்கூடாது மாணவர்கள் தொடர்ந்து போட்டி தேர்வுகளை எழுதிக் கொண்டால் நிச்சயம் வெற்றி நிச்சயம் இவ்வாறு அவர் பேசினார்.

    • நாளை தேரோட்டம் நடக்கிறது
    • முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் கருப்புலீஸ்வரர் தேரும் ஒன்று சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

    இந்த தேரோட்டம் நாளை திங்கட்கிழமை காலை நடைபெறுகிறது.

    இதனையொட்டி வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமார்வேல்பாண்டியன், வேலூர் சரக டிஐஜி டாக்டர் முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், கோவில் நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் ரமணிபாய், தேர்கமிட்டி தலைவர் எம்.எஸ்.அமர்நாத், நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தேர் செல்லும் பாதைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது தேர் செல்லும் பாதையில் குறுக்கே உள்ள மின்சார வயர்கள், தனியார் செல்போன் கம்பெனி வயர்களை அகற்ற வேண்டும், தேர் செல்லும் பாதையில் உள்ள குண்டு குழிகளை சீர் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பாதையில் முழு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், பக்தர்களை கட்டுப்படுத்தவும் தேர் திரும்பும் பகுதியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37).இவர் தோட்டப்பாளையம் காட்பாடி மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் சிமெண்ட் கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த 5 செல்போன் மற்றும் செல்போன் சம்பந்தப்பட்ட ரூ.15,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணிகண்டன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    மேலும் தோட்டப்பா ளையம் காட்பாடி ரோட்டில் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் செல்போன் கடையில் கொள்ளையடித்து விட்டு சென்ற மர்ம நபர்கள் படம் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் விசாரணை நடத்தியதில் கொள்ளையில் ஈடுபட்டது மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 26) மற்றும் சதீஷ் என்பது தெரியவந்தது. இதில் விஜயை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • மகன் இறந்த துக்கத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானார்

    வேலூர்:

    விரிஞ்சிபுரம் அருகே உள்ள இந்திரா நகர் நேரு வீதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 24) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

    இதற்கு பிறகு கணேஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமை யானார். தினமும் குடித்துவிட்டு வந்தார்.

    இதனால் அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கணேஷ்குமார் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.

    அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள்
    • டி.ஐ.ஜி. முத்துசாமி பேச்சு

    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார்.

    இயற்பியல் துறை தலைவர் மாரிமுத்து வாழ்த்தி பேசினார். உடற்கல்வி இயக்குனர் அகிலன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.

    அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    போட்டித்தேர்வுகளில் பங்கேற்க ஒரு பட்டப் படிப்பு மட்டும் போதுமானது. அதை வைத்து மத்திய மாநில அரசு பணிகளில் பங்கேற்கலாம். காவல்துறையில் பணியாற்ற விரும்பினால் படிக்கும் போதே அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    நாம் எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த பணி மீதான ஆசை அதிகமாக இருக்க வேண்டும். நாம் விரும்பும் பணி நமக்கு கிடைத்தால் அதில் சாதிக்கலாம்.

    போட்டி தேர்வுகள் மிகவும் எளிமையானது. அதை கண்டு அச்சப்பட வேண்டாம். முயற்சி செய்தால் இலக்கை அடையலாம். வாழ்வில் எண்ணங்கள் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும். உயர்ந்த ஆசை இருந்தால் இலக்கைத் தொடலாம்.

    வாழ்வில் சாதிக்க தகுதி மட்டுமே தேவையில்லை.தகுதியுடன் திறமையும் வேண்டும். கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வம் வேண்டும்.

    படிப்புடன் சமூக அக்கறையும் வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அதற்கான அணுகுமுறையும் மிக முக்கியமானதாக அமைகிறது. முறையாக திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.

    பல கிராமப்புற மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். முதலில் உங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். யாரிடமும் பேசக்கூடிய அளவிற்கான துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    உயர்ந்த பதவிகளை அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தினால் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கணிதவியல் துறை தலைவர் பத்மினி நன்றி கூறினார்.

    • நகர மன்ற கூட்டத்தில் தகவல்
    • ரூ.1 கோடி மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் அரசு, நவீன் சங்கர், தண்டபாணி, ஆட்டோ மோகன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன்.

    கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு ஊர்வலம் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சாலைகள் சீரமைக்கப்பட்டும், புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், நடமாடும் கழிப்பிடங்கள், கூடுதலாக மின்விளக்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும்.

    சொத்துவரி, குழாய்வரி உள்ளிட்ட வரி வகைகளை பெயர் மாற்றம் செய்ய 6 வார்டுகளுக்கு ஒரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் சம்ப ந்தப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம், குடியாத்தம் பகுதியில் குப்பைகளை அகற்ற சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.

    விரைவில் இந்த வாகனங்கள் வரும் அப்போது குடியாத்தம் தூய்மையான நகராக மாறும் குப்பைகள் உடனு க்குடன் அகற்றப்படும், கோழி கழிவு களை கொட்டு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பேனர் வைப்பது குறித்து அதிகாரி களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும், சுங்கச்சாவ டிகளில் கட்டண விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி உயர் அதிகாரி களுக்கு அனுப்பப்படும் என்றார்.

    இக்கூட்ட த்தில் அடிப்படை வசதிகளான வடிகால் சீர்படுத்துதல், சுகாதார வசதி ஏற்படுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் சிறு மின்விசை பம்புகள் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×