செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது

கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல்
செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது
Published on

வேலூர்:

வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37).இவர் தோட்டப்பாளையம் காட்பாடி மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் சிமெண்ட் கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த 5 செல்போன் மற்றும் செல்போன் சம்பந்தப்பட்ட ரூ.15,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து மணிகண்டன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் தோட்டப்பா ளையம் காட்பாடி ரோட்டில் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் செல்போன் கடையில் கொள்ளையடித்து விட்டு சென்ற மர்ம நபர்கள் படம் பதிவாகி இருந்தது.

இதன் மூலம் விசாரணை நடத்தியதில் கொள்ளையில் ஈடுபட்டது மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 26) மற்றும் சதீஷ் என்பது தெரியவந்தது. இதில் விஜயை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com