என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey of Chariot Works"

    • நாளை தேரோட்டம் நடக்கிறது
    • முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் கருப்புலீஸ்வரர் தேரும் ஒன்று சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

    இந்த தேரோட்டம் நாளை திங்கட்கிழமை காலை நடைபெறுகிறது.

    இதனையொட்டி வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமார்வேல்பாண்டியன், வேலூர் சரக டிஐஜி டாக்டர் முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், கோவில் நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் ரமணிபாய், தேர்கமிட்டி தலைவர் எம்.எஸ்.அமர்நாத், நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தேர் செல்லும் பாதைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது தேர் செல்லும் பாதையில் குறுக்கே உள்ள மின்சார வயர்கள், தனியார் செல்போன் கம்பெனி வயர்களை அகற்ற வேண்டும், தேர் செல்லும் பாதையில் உள்ள குண்டு குழிகளை சீர் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பாதையில் முழு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், பக்தர்களை கட்டுப்படுத்தவும் தேர் திரும்பும் பகுதியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

    ×