search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நமக்கு நாமே திட்டத்தில் 147 பணிகள்
    X

    நமக்கு நாமே திட்டத்தில் 147 பணிகள்

    • பொதுமக்கள் பணிகளை தேர்வு செய்யலாம்
    • மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன

    வேலூர்:

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் ஊரகப் பகுதிகளில் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.

    இந்த நிதியாண்டில் 115 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், 10 கழிவுநீர் இணைப்பு பணிகள், 7 சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2 கழிவுநீர் சிமெண்ட் கால்வாய்கள், 2 குடிநீர் குழாய் பணிகள், 2 பேருந்து நிழற்குடை பணிகள், 1 தார் சாலை, 1 பேவர் பிளாக் அமைக்கும் பணி, 1 அரசு பள்ளிக்கு மேஜை நாற்காலி கொள்முதல், 1 நியாய விலை கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் 147 திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன.

    பணிகள் பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. இதில் ரூ.8.07 கோடி நிதி அரசு பங்களிப்பாகவும், ரூ. 2.28 கோடி தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள படுகின்றது.

    தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டப் பணிகளை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    Next Story
    ×