என் மலர்tooltip icon

    வேலூர்

    • தூக்கில் பிணமாக மீட்பு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கரடிகுடி அருகே உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 60).

    இவர் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதன்படி இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார்.

    பிரகாஷ் கடன் கொடுத்தவர்களிடம் சென்று, பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ஒருசிலர் பணத்தை திரும்ப தர காலம் தாழ்த்தி வந்தனர்.

    மேலும் ஒருசிலர் பணத்தை கொடுக்கமுடியாது எனவும் பிரகாசுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பிரகாஷ், அவரது விவசாய நிலத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பகத்தன்மை என்பது குறைந்துள்ளது
    • ஆர்டரை ரத்து செய்து திருப்பி கொடுத்துவிட்டார்

    வேலூர்:

    ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் தவறுதலான பொருட்கள் டெலிவரி செய்யும் சம்பவங்கள் நடத்துள்ளது.

    இன்னும் சில நேரங்களில் போலியான வணிகர்களிடம் இருந்து போலியான பொருட்களும் டெலிவரி செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பகத்தன்மை என்பது குறைந்துள்ளது.

    செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்புகள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

    வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஒருவர் ஸ்மார்ட் செல்போன் வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.7,500 மதிப்பிலான செல்போன் வாங்க ஆர்டர் செய்தார்.

    நேற்று அவரது முகவரிக்கு செல்போனை டெலிவரி பாய் கொண்டு வந்தார். அப்போது அந்த செல்போன் பார்சலை திறக்கும் முன்பு ஆர்டர் செய்த நபர் இதனை வீடியோ எடுத்தார்.

    டெலிவரி பாய், செல்போன் பார்சலை பிரித்தபோது அதில் பாத்திரங்கள் கழுவும் 3 சோப்புகள் இருந்தது. இதனால் ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பார்சலில் சார்ஜர் மற்றும் ஹெட்செட் இருந்தது. செல்போனுக்கு பதில் சோப்புகள் இருந்ததால் அதை அவர் ஆர்டரை ரத்து செய்து திருப்பி கொடுத்துவிட்டார்.

    • வனத்துறையினர் அலட்சியம்
    • நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூர் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் தொடர்நது உயிரிழக்கிறது. வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற சம்பவம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிக அளவில் கானப்படுகின்றது. இங்கு காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

    தற்போது மழை இல்லாமல் வெயில் காலம் என்பதால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன. மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதியை உயிருடன் அதிகம் செல்வதில்லை. பல நேரங்களில் நாய் கடித்தும், பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது. இதேபோல் கடந்த மாதம் 3 புள்ளி மான்கள் இறந்த நிலையில் நேற்றும் ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் தேடி மான் ஒன்று ஊருக்குள் வந்தது. அதனை பார்த்த வேட்டை நாய்கள் மானை துரத்தி கடித்து வேட்டையாடியது. அந்த மான் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தது.

    இதனையடுத்து வனத்துறை வனச்சரகர் இந்து, வனவர் ஜனார்தனன், வனக்காப்பாளர் சங்கீதா ஆகியோர் மான் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றை அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    வெயில் காலத்தில் மட்டுமே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றது. அவ்வாறு வரும் விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் அனுப்ப வேண்டுமே தவிர அவற்றை அடக்க செய்ய கூடாது என ஆவேசமாக பேசி வருகின்றனர். வன ப்பகுதியில் விலங்குகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பினால் போதும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் முழுமையாக தடுக்கலாம். வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்புகள் சம்பவம் நடக்கிறது. இதுபோல் அழிந்து வரும் வனவில ங்கு களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
    • சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    குடியாத்தம்;

    குடியாத்தம் அடுத்த மோடிக்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு.

    இவர் தனது விவசாய நிலத்தில் 5 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை,பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர் வளர்த்து வரும் நாய் கொடூரமாக கடித்தது. இதனால் ஆடு பலியானது.

    இதையடுத்து ஆத்திரமடைந்த ரகு இறந்த ஆட்டுடன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு சொந்தமான மற்றொரு ஆட்டை நாய் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

    நாய் கடித்து இறந்து போன ஆட்டுடன் விவசாயி போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை
    • ஜி.பி.எஸ். கருவியுடன் அளவீடு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    அல்லேரி மலைப்பகுதியில் வனத்துறைக்கு நிலம் ஒப்படைக்க நேற்று டிஆர்ஓ ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்தி மரத்துக் கொல்லை பகுதியை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.

    இவர் கடந்த 27-ந்தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்கு கையால் சுமந்து நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைக்க அளவீடு பணி நடந்து, மேலும் அனுமதி கேட்டு மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,

    இதற்கு இடையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு, வனத்துறைக்கு மாற்று இடம் வழங்க அல்லேரி மலை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை.

    எனவே வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தின், தொழில்நுட்ப பிரிவு குழுவின் உதவியோடு ஜி.பி.எஸ். கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவினர், ஜி.பி.எஸ். கருவியுடன் அல்லேரி மலையில் அளவீடு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து வருவாய்துறையினர் அளவீடு செய்ததில் ஒரு சில அளவீடு கற்கல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

    இதனை தொடர்ந்து நேற்று வேலூர் டிஆர்ஓ ராமமூரத்தி மற்றும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரேசன், புஷ்பராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து அளவிடும் பணிகள் விரைவாக துவங்கி வனத்துறைக்கு சேர வேண்டிய நிலத்தினை ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

    • சாலையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகள்
    • குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி பகுதியில் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை ஆய்வு செய்தனர.

    இதில் 555 கிலோ ரேஷன் அரிசியை, மூட்டைகள் மூலம் கடத்துவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • திடீர் நெஞ்சுவலியால் அலறி துடித்தார்
    • இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    வேலூர்,:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 47). பார்சல் சர்வீஸ் லாரி ஓட்டி வந்தார். நேற்று ஆம்பூரில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று பொருட்களை இறக்கினார்.

    இன்று காலை சென்னையில் இருந்து வேலூரை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் வள்ளலார் அருகே லாரி வந்தபோது தினகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த தினகரன் சம யோசித்தமாக செயல்பட்டு லாரியை சாலையோரம் நிறுத்தினார். இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.

    ஒரு சில நிமிடங்களில் தினகரன் பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரம் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டு டிரைவர் ஸ்டேரிங் மீது விழுந்து கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் கண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினகரனை பரிசோதித்த போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசன்ஸ் மூலம் அவரது முகவரியை கண்டுபிடித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்
    • 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுப்பிடித்து அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்ணன், ஏ.எஸ்.பி. பாஸ்கரன். ஆகியோரின் தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அல்லேரி, அத்திமரத்துக்கொல்லை, பலாமரத்தூர், நெல்லிமரத்துக்கொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 1000 லிட்டர் சாராயம் கண்டுப்பிடித்து அழித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த விஜய்குமார் (வயது 34) மற்றும் விஜயகாந்த் (வயது 22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மலைப்பகுதியில் சாராயம் யார் காய்ச்சுவது என்பதை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கர்ப்பிணிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • 800-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி நந்தகுமார் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.

    இங்கு பொதுமருத்துவம் மகப்பேறு மருத்துவம், காசநோய் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், ஆய்வகம், மக்களை தேடி மருத்துவம், பரிந்துரை பிரிவு, ஸ்கேன் பிரிவு, ஆலோசனை பிரிவு, நெஞ்சக பிரிவு, போன்றவைகளை இங்கு பரிசோதித்து மேல் சிகிச்சைக்கு பரிந்துறை செய்தனர்.

    இதில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பொய்கை, பள்ளிகொண்டா ஆகிய சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 800- க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    முகாமில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • செல்போன் மற்றும் மணிபர்ஸ் மறந்து விட்டார்
    • போலீசார் டிரைவரை பாராட்டினர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கள்ளூர், ஜெமினி நகரை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 30) ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று குடியாத்தம் பஸ் நிலையத்தில் இருந்து பிச்சனூர் பகுதிக்கு பெண் ஒருவரை ஏற்றி சென்றார்.

    அந்த பெண் பலமநேர் சாலை அரசமரம் அருகே இறங்கி சென்றார். இதனையடுத்து ஜெயவேலு வேறு இடத்திற்கு சவாரிக்கு சென்றார்.

    அப்போது ஜெயவேல் திடீரென ஆட்டோவில் திரும்பி பார்த்தபோது, பெண் செல்போன் மற்றும் மணிபர்ஸ் தவறவிட்டு சென்றது தெரிந்தது. பின்னர் ஜெயவேலு செல்போன் மற்றும் மணிபர்சை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் செல்போன் மற்றும் பணத்தை தவறவிட்ட, பிச்சனூர் பகுதியை சேர்ந்த லாவண்யாவிடம் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டினர்.

    • 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவை புரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சரால் விருது வழங்கப்படுகிறது.

    15.08.2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள், தேர்வுகுழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வரும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    மாற்றுத்தி றனாளி களுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிருவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்தி றனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்க உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் மேற்படி விருதுகளுக்கு தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களி டமிருந்து விண்ண ப்பங்கள் வரவேற்க்க ப்படுகிறது. இந்த விருதுகளு க்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர், மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம், பழைய பஞ்சாயத்து அலுவலக வளாகம், அண்ணா சாலை, என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றித ழ்களுடன வருகிற 26-ந் தேதிமாலை 5.30 மணிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை
    • 2 மாதத்திற்குள் பணியை முழுமை படுத்த நடவடிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது முள்ளுவாடி மலை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூருக்கு சென்று தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் சென்று வர மேல்அரசம்பட்டு பங்களாமேடு கிராமத்தில் இருந்து, முள்ளுவாடி மலை கிராமம் செல்லும் வழியில் பாதி தொலைவு வனத்துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.

    சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தார் சாலை நாளடைவில் குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்தது. இதனை சீரமைத்து தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த முள்ளுவாடி கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று பங்களாமேடு அருகே ஒன்று திரண்டு வந்தனர். அங்கு சாலையை சீரமைப்பதோடு, விடுபட்ட தூரத்தில் சாலை அமைக்க வேண்டும். கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் 2 மாதத்திற்குள் பழுதடைந்த தார் சாலை புதுப்பிப்பதோடு, பாதியில் தடைபட்டு நிற்கும் சாலை பணியை முழுமை படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×