search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லேரி மலைப்பகுதியில் சாலை பணி வனத்துறைக்கு நிலம் ஒப்படைக்க ஆய்வு
    X

    வனத்துறைக்கு நிலம் ஒப்படைக்க வருவாய்துறையினர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    அல்லேரி மலைப்பகுதியில் சாலை பணி வனத்துறைக்கு நிலம் ஒப்படைக்க ஆய்வு

    • பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை
    • ஜி.பி.எஸ். கருவியுடன் அளவீடு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    அல்லேரி மலைப்பகுதியில் வனத்துறைக்கு நிலம் ஒப்படைக்க நேற்று டிஆர்ஓ ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்தி மரத்துக் கொல்லை பகுதியை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.

    இவர் கடந்த 27-ந்தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்கு கையால் சுமந்து நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைக்க அளவீடு பணி நடந்து, மேலும் அனுமதி கேட்டு மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,

    இதற்கு இடையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு, வனத்துறைக்கு மாற்று இடம் வழங்க அல்லேரி மலை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை.

    எனவே வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தின், தொழில்நுட்ப பிரிவு குழுவின் உதவியோடு ஜி.பி.எஸ். கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவினர், ஜி.பி.எஸ். கருவியுடன் அல்லேரி மலையில் அளவீடு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து வருவாய்துறையினர் அளவீடு செய்ததில் ஒரு சில அளவீடு கற்கல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

    இதனை தொடர்ந்து நேற்று வேலூர் டிஆர்ஓ ராமமூரத்தி மற்றும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரேசன், புஷ்பராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து அளவிடும் பணிகள் விரைவாக துவங்கி வனத்துறைக்கு சேர வேண்டிய நிலத்தினை ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×