என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They come to residential areas in search of water"

    • வனத்துறையினர் அலட்சியம்
    • நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூர் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் தொடர்நது உயிரிழக்கிறது. வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற சம்பவம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிக அளவில் கானப்படுகின்றது. இங்கு காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

    தற்போது மழை இல்லாமல் வெயில் காலம் என்பதால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன. மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதியை உயிருடன் அதிகம் செல்வதில்லை. பல நேரங்களில் நாய் கடித்தும், பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது. இதேபோல் கடந்த மாதம் 3 புள்ளி மான்கள் இறந்த நிலையில் நேற்றும் ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் தேடி மான் ஒன்று ஊருக்குள் வந்தது. அதனை பார்த்த வேட்டை நாய்கள் மானை துரத்தி கடித்து வேட்டையாடியது. அந்த மான் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தது.

    இதனையடுத்து வனத்துறை வனச்சரகர் இந்து, வனவர் ஜனார்தனன், வனக்காப்பாளர் சங்கீதா ஆகியோர் மான் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றை அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    வெயில் காலத்தில் மட்டுமே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றது. அவ்வாறு வரும் விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் அனுப்ப வேண்டுமே தவிர அவற்றை அடக்க செய்ய கூடாது என ஆவேசமாக பேசி வருகின்றனர். வன ப்பகுதியில் விலங்குகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பினால் போதும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் முழுமையாக தடுக்கலாம். வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்புகள் சம்பவம் நடக்கிறது. இதுபோல் அழிந்து வரும் வனவில ங்கு களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×