என் மலர்
வேலூர்
- 33 கடைகள் வரி பாக்கி
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை பாக்கி உள்ளிட்டவைகளை மாநகராட்சி அதிகாரிகள் வசூல் செய்து வருகின்றனர்.
தற்போது வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக 1200 கடைகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 33 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர்.
வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு மட்டும் இன்று சீல் வைத்தனர்.
- மழையால் வரவில்லை
- அதிகாரிகள் இருக்கைகள் காலியாக இருந்தன
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை பலத்த மழை பெய்ததால் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார்.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.
குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை விதவை பெண்கள் உதவித்தொகை, ரேசன் கார்டு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர்.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க குறைந்த அளவிலான பொதுமக்கள் வந்து இருந்தனர். இதனால் குறை தீர்வு கூட்டம் ஆட்கள் என்று வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது. மனுக்களை பெறவேண்டிய அதிகாரிகளும் குறைந்த அளவு வந்து இருந்ததால் இருக்கைகள் காலியாக இருந்தன.
- முதியவர் ஜெயிலில் அடைப்பு
- அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்
வேலூர்:
காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது மனநலம் குன்றிய பெண்.
கடந்த 5 ஆண்டுகளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் தனியாக இருந்தார். அவரது எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52).
மனம் நலம் குன்றிய பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, கோவிந்தசாமி அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர்
- மரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் காயம்
வேலூர்:
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம்
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில வெயிலின் அளவு 100 டிகிரியையும் தாண்டி அணல் காற்று வீசியது. கடந்த 4 மாதமாக வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
இந்தநிலையில் வேலூரில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை மழையின் அளவு அதிகமானது.
பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தப்படியும் மிகவும் சிரமத்துடன் சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், இந்த 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.
காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு சென்றனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் பகுதியை சேர்ந்த மகாதேவன் (வயது 66) மற்றும் அவரது மகன் குமார் (33) ஆகியோர் இன்று அதிகாலை பனப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்தனர்.
பின்னர் மீண்டும் காஞ்சிபுரம் செல்ல திருமால்பூர் சுடுகாடு அருகே சென்றபோது, சூறைகாற்றுடன் மழை பெய்தது. அப்போது திடீரென ஆலமரக்கிளை முறிந்து, பைக் மீது விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை, அந்த பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகலில் தொடர் மழை பெய்ததால் அனைத்து அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்பட்டது.
- போக்குவரத்து பாதிப்பு
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
வேலூர்:
வேலூரின் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் குளம் போல் தேங்கியது. பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த வந்த மழைநீர் கழிவுநீர் கால்வாய்களில் கலந்தது ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை சி.எம்.சி. மருத்துவமனை அருகே சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் குழாய்கள் பதிக்கபட்டுள்ளது.
கழிவுநீருடன் மழைநீர் கலந்ததால், பாதாள சாக்கதை திட்ட குழாயின் மூடி வழியாக கழிவுநீர் பொங்கி வழிந்தது. சாலைகள் முழுவதும் கழிவுநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் கழிவுநீர் பொங்கி வழிந்த பாதாள சாக்கடை திட்ட குழாய் மூடியை சுற்றி வாகனங்கள் செல்லாதவாறு, தடுப்புகள் வைக்கபட்டன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை
- மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்துக்கொண்டு விவசாயம் பார்த்து வருகின்றார்.
ஒடுகத்தூரில் உள்ள தேசியமையமாக்கப்பட்ட வங்கியில் மாதந்தோறும் பால் விற்ப்பனை செய்யும் பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒடுகத்தூரில் வங்கி அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.
ஏ.டி.எம்யில் பணம் எடுக்க தெரியாமல் அவருக்கு முன் நின்றிருந்த நபரிடம் தனது கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் எடுத்துக்கொடுக்கும்படி கூறி அவரது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய அந்த நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என கூறிவிட்டு, அவர் கையில் வைத்து இருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை செல்வத்திடம் கொடுத்து விட்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து முதியவர் ஏ.டி. எம். கார்டை பார்த்தபோது வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதற்கு வங்கி ஊழியர்கள் வங்கி கணக்கு புத்தகம் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர்.
இதனால் சுமார் 10 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ள மேல் அரசம்பட்டில் இருக்கும் வீட்டுக்கு சென்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வருவதற்குள், அந்த மர்ம நபர் குருவராஜ பாளையத்தில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் இருந்து செல்வத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.16 ஆயிரத்தை எடுத்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வம் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி. எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடிப்பார்த்தானர். ஆனால் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் திணறி வருகின்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில்:-
வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தோம் ஆனால் அதில் சரியான அடையாளம் தெறியாலம் உள்ளது.
இதனை சைபர் கிரைம் துறைக்கு அனுப்பி தான் விசாரனை செய்ய முடியும் அனைத்து வங்கிகளில் பாதுகாப்பாளர்கள் உள்ளனர். தங்களுக்கு ஏதேனும் சந்தேகமோ அல்லது பணம் எடுப்பது, பணம் செலுத்துவது இதுபோல் சந்தேகம் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக பணத்தினை எடுக்கலாம்,
முகம் தெறியாத பழக்கம் இல்லாத தனி நபர்களிடம் இது போல் தனது ஏ.டி.எம் கார்ட்டுகளை கொடுத்து எடுக்க வைப்பது பாதுகாப்பு அற்றது எனவும் கூறுகின்றனர்.
மேலும் அனைத்து வங்கி ஏ.டி.எம் மையங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இது போல் குற்றச்செயல்கள் நடப்பது பொதும்க ளிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான் காரணம் பணத்தை எடுத்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தமிழகம் முழுவதிலும் இன்று பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி சாந்திநிகேதன் மெட்ரிக்பள்ளி, காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, டிரினிட்டி மெட்ரிக் பள்ளி, கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி, கழனிப்பாக்கம் நாமக்கல் டீச்சர்ஸ் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, சாய்நாதபுரம் என்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி ஆகிய 8 மையங்களில் நடந்தது.
இதில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுத வராதவர்கள் மற்றும் தனிதேர்வாளர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது.
அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பிளஸ்-2 துணைத் தேர்வு எந்தவித மாற்றமும் இன்றி நடந்தது.
அதேபோல் இந்த 8 மையங்களிலும் பிளஸ்-1 துணைத் தேர்வு வருகிற 27-ந் தேது முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்
- ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை மீட்டனர்
வேலூர்:
வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). தனியார் சாக்லேட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் அதேபகுதியை சேர்ந்த உறவினரான ராஜேஸ்வரி (24) என்பவர் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரகாஷின் வீட்டில் இருந்து 11 பவுன் நகை திருட்டு போனது. இதுதொடர்பாக அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கின் தொடக்கத்தில் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனவே ராஜேஸ்வரி மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர்கள் காஞ்சனா, தேவபிரகாஷ் ஆகியோர் தலைமையில் முதல் நிலை காவலர்கள் ரஞ்சித்ராஜா, சுதா ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் ராஜேஸ்வரியின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பேசியது போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த பழனிமுருகன் என்பவரின் மனைவி சங்கீதா (36) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அங்குள்ள ஒரு வங்கியில் நகை ஒன்றை அடகு வைத்ததை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த நகை வேலூர் பிரகாஷ் வீட்டில் திருட்டு போன நகையாக இருக்கலாம் என்று கருதி போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் பிரகாஷின் நகை தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதனிடையே நகையை சங்கீதா மீட்டு, அதை உருக்கி உள்ளார்.
போலீசார் சங்கீதாவை பிடித்து கைது செய்தனர். அதில் அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி நகையை திருடி தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
பின்னர் ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றியபோது அவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
வேலூரில் திருடிய நகையை அவர் சங்கீதாவிடம் கொடுத்து அடகு வைத்ததுள்ளார். உருக்கி வைத்துள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை மீட்டுள்ளோம் என்றனர்.
- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.
- பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் ஆர்.என். ரவி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் உள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.
பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் ஆர்.என். ரவி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
மொத்தம் 1 லட்சத்து 13,275 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இதில் 1,12,711 மாணவ, மாணவிகள் நேரடியாக அனுமதிக்கப்படவில்லை. மீதமுள்ளவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது கைகளால் பட்டம் வழங்கினார்.
மத்திய மந்திரி வி.க. சிங் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், பதிவாளர் விஜயராகவன் தேர்வு கட்டுப்பாட்டாளர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கவர்னர் வருகையொட்டி 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குடியாத்தம் அருகே இரவு வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.
- இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமம் மோர்தானா கால்வாய் அருகே நேற்று இரவு 7 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே வந்து பார்த்தனர்.
அதில் பாராசூட் போன்ற ஒரு பொருளும், அதன் அருகிலேயே சிக்னல் அடித்துக் கொண்டு சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததைக் கண்டனர். இதனால் கிராம மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரித்தனர். வானத்தில் இருந்து கீழே விழுந்த பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிலிருந்து சிக்னல்கள் வந்தபடி இருந்த சிறிய அளவிலான பாக்சில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என முகவரி இருந்தது. மேலும் அதில் போன் நம்பரும் இருந்தது. போலீசார் அதிலிருந்த நம்பரை தொடர்பு கொண்டபோது அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என தெரிய வந்தது.
அந்தப் பெட்டி பல்வேறு பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை போலீசார் பத்திரமாக சேகரித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
வானிலிருந்து மர்ம பொருள் விழுந்ததால் குடியாத்தம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சதீஷின் மனைவி வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை, சந்துரு, முனீஸ், ஆகாஷ், விஜய், ராமு மற்றும் சதீஷ் மனைவி ஆகியோர் சேர்ந்து கைகளால் தாக்கியதுடன், பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து இளம்பெண் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனீஸ் மற்றும் சதீஷ் மனைவி ஆகிய 2 பேரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்
- விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் அருகே வாகன ஓட்டிகளுக்கு சத்துவாச்சாரி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பேசியதாவத:-
பைக் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது. 4 சக்கர மற்றும் கனரக வாகனம் ஓட்டும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விபத்துகளை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






