என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க ஆட்கள் இன்றி வெறிச்சோடிய காட்சி.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் வெறிச்சோடியது
- மழையால் வரவில்லை
- அதிகாரிகள் இருக்கைகள் காலியாக இருந்தன
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை பலத்த மழை பெய்ததால் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார்.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.
குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை விதவை பெண்கள் உதவித்தொகை, ரேசன் கார்டு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர்.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க குறைந்த அளவிலான பொதுமக்கள் வந்து இருந்தனர். இதனால் குறை தீர்வு கூட்டம் ஆட்கள் என்று வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது. மனுக்களை பெறவேண்டிய அதிகாரிகளும் குறைந்த அளவு வந்து இருந்ததால் இருக்கைகள் காலியாக இருந்தன.






