என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Do not drive after drinking alcohol"

    • கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்
    • விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் அருகே வாகன ஓட்டிகளுக்கு சத்துவாச்சாரி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பேசியதாவத:-

    பைக் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது. 4 சக்கர மற்றும் கனரக வாகனம் ஓட்டும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

    மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விபத்துகளை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×