என் மலர்
நீங்கள் தேடியது "16 thousand fraud"
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை
- மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்துக்கொண்டு விவசாயம் பார்த்து வருகின்றார்.
ஒடுகத்தூரில் உள்ள தேசியமையமாக்கப்பட்ட வங்கியில் மாதந்தோறும் பால் விற்ப்பனை செய்யும் பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒடுகத்தூரில் வங்கி அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.
ஏ.டி.எம்யில் பணம் எடுக்க தெரியாமல் அவருக்கு முன் நின்றிருந்த நபரிடம் தனது கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் எடுத்துக்கொடுக்கும்படி கூறி அவரது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய அந்த நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என கூறிவிட்டு, அவர் கையில் வைத்து இருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை செல்வத்திடம் கொடுத்து விட்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து முதியவர் ஏ.டி. எம். கார்டை பார்த்தபோது வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதற்கு வங்கி ஊழியர்கள் வங்கி கணக்கு புத்தகம் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர்.
இதனால் சுமார் 10 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ள மேல் அரசம்பட்டில் இருக்கும் வீட்டுக்கு சென்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வருவதற்குள், அந்த மர்ம நபர் குருவராஜ பாளையத்தில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் இருந்து செல்வத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.16 ஆயிரத்தை எடுத்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வம் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி. எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடிப்பார்த்தானர். ஆனால் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் திணறி வருகின்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில்:-
வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தோம் ஆனால் அதில் சரியான அடையாளம் தெறியாலம் உள்ளது.
இதனை சைபர் கிரைம் துறைக்கு அனுப்பி தான் விசாரனை செய்ய முடியும் அனைத்து வங்கிகளில் பாதுகாப்பாளர்கள் உள்ளனர். தங்களுக்கு ஏதேனும் சந்தேகமோ அல்லது பணம் எடுப்பது, பணம் செலுத்துவது இதுபோல் சந்தேகம் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக பணத்தினை எடுக்கலாம்,
முகம் தெறியாத பழக்கம் இல்லாத தனி நபர்களிடம் இது போல் தனது ஏ.டி.எம் கார்ட்டுகளை கொடுத்து எடுக்க வைப்பது பாதுகாப்பு அற்றது எனவும் கூறுகின்றனர்.
மேலும் அனைத்து வங்கி ஏ.டி.எம் மையங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இது போல் குற்றச்செயல்கள் நடப்பது பொதும்க ளிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான் காரணம் பணத்தை எடுத்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






