என் மலர்
நீங்கள் தேடியது "Plus-2 Sub-Examination"
- வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தமிழகம் முழுவதிலும் இன்று பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி சாந்திநிகேதன் மெட்ரிக்பள்ளி, காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, டிரினிட்டி மெட்ரிக் பள்ளி, கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி, கழனிப்பாக்கம் நாமக்கல் டீச்சர்ஸ் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, சாய்நாதபுரம் என்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி ஆகிய 8 மையங்களில் நடந்தது.
இதில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுத வராதவர்கள் மற்றும் தனிதேர்வாளர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது.
அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பிளஸ்-2 துணைத் தேர்வு எந்தவித மாற்றமும் இன்றி நடந்தது.
அதேபோல் இந்த 8 மையங்களிலும் பிளஸ்-1 துணைத் தேர்வு வருகிற 27-ந் தேது முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






