என் மலர்
நீங்கள் தேடியது "மகப்பேறு மருத்துவம்"
- கர்ப்பிணிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
- 800-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி நந்தகுமார் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.
இங்கு பொதுமருத்துவம் மகப்பேறு மருத்துவம், காசநோய் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், ஆய்வகம், மக்களை தேடி மருத்துவம், பரிந்துரை பிரிவு, ஸ்கேன் பிரிவு, ஆலோசனை பிரிவு, நெஞ்சக பிரிவு, போன்றவைகளை இங்கு பரிசோதித்து மேல் சிகிச்சைக்கு பரிந்துறை செய்தனர்.
இதில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பொய்கை, பள்ளிகொண்டா ஆகிய சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 800- க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






