என் மலர்
திருவண்ணாமலை
செய்யாறு அருகே கத்தியை காட்டி பைக் திருட முயன்ற வேலூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கருணா (வயது 39), எலக்ட்சியன்.
இவர் நேற்று காலை பொருட்களை வாங்குவதற்காக செய் யாருக்கு தனது பைக்கில் வந்தார். அப்பொது அருகாவுரில் வண்டியை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னால் பெயர் பலகை இல்லாத பைக்கில் வந்த 2 பேர் இறங்கி எலக்ட்ரீசியன் ஓட்டிவந்த பைக்கை திருட முயற்சி செய்தனர்.
கருணா ஏன் என் பைக்கை எடுக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வண்டியை தள்ள முயற்சி செய்தபோது அங்கிருந்தவர்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் வேலூர் கொசப்பேட்டை சேர்ந்த ஷகில் (34), வேலூர் வேலப்பாடி சேர்ந்த சுந்தர் (38) என்பது தெரியவந்தது/
கருணா கொடுத்த புகாரின் மீது இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூரில் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா வில் அமைந்துள்ள. நற் குன்று ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ பால முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு மதியம் 12 மணிக்கு முருகன் வள்ளி தெய்வயானை திருமணம் கோலத்தில் காட்சி அளித்தார்.
மதியம் ஒரு மணியளவில் ஸ்ரீ ஜெய குரு நண்பர்களால் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வருமான வரித்துறை ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சம்மேளன அகில இந்திய தலைவர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேள சார்பில் வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய தலைவர் வெங்கடேசன் கூறுகையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் வருமான வரித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 40ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்தை விரைந்து வழங்க வேண்டும்.
பணி நியமன விதிகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28 மற்றும் 29&ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் நாடு முழுவதும் உள்ள 572 வருமான வரித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 36 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த போராட்டத்தில் 100 சதவீதம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழக மாநில தலைவர் சியாம்நாத், சென்னை அமைப்பு செயலாளர் ஓம்பிரகாஷ்படேல், வேலூர் சரக செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேத்துப்பட்டில் உரம் அதிக விலைக்கு விற்பதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் சுமார் 8-க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு சேத்துப்பட்டு சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய பொருட்களான யூரியா விவசாய இடுபொருட்கள் மருந்து ஆகியவற்றை இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்.
சேத்துப்பட்டில் உள்ள உரகடைகளில் கடந்த ஒரு மாதமாக யூரியா தட்டுப்பாடு உள்ளது. குறைந்த அளவே யூரியா வருவதால் விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு யூரியா வாங்கி செல்கின்றனர்.
நேற்று காலை சேத்துப்பட்டில் உள்ள 5 கடைகளில் யூரியா வந்தது. இதை வாங்க சென்ற விவசாயிகளிடம் வழக்கமான விலையை விட யூரியா அதிக விலைக்கு விவசாயிகளிடம் விற்பனை செய்தனர்.
மேலும் விவசாய இடு பொருட்களை கட்டாயமாக யூரியா வாங்க வரும் விவசாயிகளிடம் இடுபொருட்கள் வாங்கினால்தான் யூரியா தரப்படும் என கட்டாயப்படுத்தி விவசாயிகள் இடுபொருட்கள் மற்றும் யூரியாவை விற்பனை செய்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர்.
இதையடுத்து அங்கிருந்து விவசாயிகள் சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அதிக விலைக்கு விற்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என தரையில் அமர்ந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ் மற்றும் வேலு விவசாயிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து உங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள் சாலை மறியல் செய்யக்கூடாது என்றனர்.
பின்னர் அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்று சேத்துப்பட்டு தாசில்தார் இடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தனர்.
ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகளால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
ஆரணி:
ஆரணி அருகே பழங்காமூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சுமார் 158 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
பள்ளியின் அருகில் முட்புதர் மற்றும் காடு நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. இதனால் பாம்பு போன்ற விஷமிகள் அதிகளவில் நடமாடுகின்றன.
இன்று பள்ளி விளையாட்டு பிரியடில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது முட்புதரில் 2 நல்ல பாம்புகள் ஒன்றுயொடு ஒன்று பின்னி பிணைந்து இருந்தன.
இதனை கண்டு குழந்தைகள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி தீயைணப்பு துறையினர் பள்ளி அருகாமையில் முட்புதரில் இருந்த நல்ல பாம்புகளை பிடித்து ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் சென்று விட்டனர்.
பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் இருக்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள காடுகள் போன்ற செடி கொடிகளை அகற்றி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சாவல் பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்- அமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ராகுல் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு 35 பேர் பட்டா மாறுதல் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
அதில் 5 மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக சண்டி-குபேர லட்சுமி ஹோமம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
உலக மக்கள் கொரோனா தொற்று மற்றும் போர் உள்ளிட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழ்வதற்காக பிரார்த்தனை செய்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பவுர்ணமியை முன்னிட்டு வேத மந்திர வாழ்க்கை கட்டளை சார்பில் இன்று காலை குபேர லட்சுமி ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது.
இதில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அன்னதானம், சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக நேற்று மாலையும் கிரிவலப் பாதை ஜோதி விநாயகர் கோவில் அருகில் சாதுக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போளூர் எம்.எல்.ஏ.அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, டாக்டர் பழனி, சித்த மருத்துவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.

மாலை சுமார் 5 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது. 23 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே தனித்தனியாக கிரிவலம் சென்றனர். காணும் இடமெல்லாம் பலர் அன்னதானம் வழங்கினர்.

மாலை சுமார் 5 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.
இதையும் படிக்கலாம்...திருமணம் கைகூடச் செய்யும் ‘கல்யாண விரதம்’
ஆரணி அருகே ஓட்டல் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் ராஜேந்திரன் என்பவர் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஊழியர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து உணவு பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டா¤ல் கசிவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ பிடித்து மளமளவென எ£¤ய தொடங்கியது.
இதனால் பதற்றமடைந்த கடை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தொ¤வித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடையில் சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எ£¤ந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் பான்கார்டு எண்ணை இணைப்பதாக கூறி மருத்துவத்துறை ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் அபகரிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சமுத்திரம் நகரைச் சேர்ந்தவர் முகமது சபியுல்லா (வயது52) இவர் மருத்துவத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் தங்கள் வங்கி கணக்குடன் பான் கார்டு நம்பரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு 2 நாட்களில் முடக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பான் எண்ணை இணைப்பதற்கு குறுஞ்செய்தி உள்ள இணைப்பை பயன்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை முகமது சபியுல்லா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கஸ்டமர் கேர் சேவை பிரிவில் இருந்து பேசுவதாக ஒரு ஆண் பேசி உள்ளார்.
அவர் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து பான் கார்டு நம்பர் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். அப்போது வங்கி கணக்குடன் இணைப்பதற்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும். அதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுபோல தொடர்ந்து 5 முறை ஓ.டி.பி.எண் கேட்டு சரி பார்ப்பது போல தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் முகமது சபியுல்லா வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரத்து 788 இன்டர்நெட் பேங்கிங் மூலம் அபகரித்துள்ளார்.
இணைப்பை துண்டித்த பிறகு பணம் பறிபோன எஸ்.எம்.எஸ் அடுத்தடுத்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது சபியுல்லா சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளார்.
ஆனாலும் நூதன முறையில் நடந்துள்ள இந்த மோசடியை நேரடியாக தங்களால் கண்டறிய முடியாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து முகமதுசபியுல்லா திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தச் சம்பவம் திருவண்ணாமலை பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் அக்னி தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மேலும் வெளிநாட்டு பக்தர்கள் பலர் தங்கி தியானம் உள்ளிட்ட ஆன்மீக வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து மன அமைதி பெறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் திருவண்ணா மலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கிரிவலப்பாதையில் துப்புரவு பணிகள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று மதியம் பங்குனி மாத பவுர்ணமி தொடங்கவுள்ள நிலையில் காலையிலேயே பக்தர்கள் வருகை தரத் தொடங்கி விட்டனர். அவர்கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஆன்மீக அமைப்புகள் சார்பில் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலையோரங்களில் சிறு சிறு கடைகள் பல தற்காலிகமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பக்தர்கள் எந்தவித தடையும் இன்றி மனமகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இன்று மாலை பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தில் திருவண்ணாமலை உழவர் சந்தை முதலிடத்தை பிடித்துள்ளது.
திருவண்ணாமலை:
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு செய்யாத வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்து உழவர் சந்தையில் விற்பனை செய்யும் திட்டம் உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல்படி வேளாண்மைத்துறை ஒத்துழைப்புடன் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை. மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு காய்கறிகளை உணவுமாதிரி எடுத்தும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் உழவர் சந்தை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் திருவண்ணாமலை உழவர் சந்தை தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.அதற்கான நற்சான்று திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநில அளவில் முதலிடத்துக்கு கிடைத்துள்ள இந்த சான்றிதழை திருவண்ணாமலை யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் ஆகியோரிடம் கலெக்டர் முருகேஷ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் காட்டி வாழ்த்து பெற்றனர்.
இந்த சாதனையை நிகழ்த்திய உணதுபாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோரை அமைச்சர்கள் பெரிதும் பாராட்டினர்.






