என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் காட்சி.
    X
    தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் காட்சி.

    ஆரணி அருகே ஓட்டல் கடையில் தீ விபத்து

    ஆரணி அருகே ஓட்டல் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் ராஜேந்திரன் என்பவர் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஊழியர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர்.

    இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து  உணவு பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டா¤ல் கசிவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ பிடித்து மளமளவென எ£¤ய தொடங்கியது. 

    இதனால் பதற்றமடைந்த கடை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தொ¤வித்தனர். 

    விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    கடையில் சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எ£¤ந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×