search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சேத்துப்பட்டில் உரம் அதிக விலைக்கு விற்பதாக கூறி விவசாயிகள் போராட்டம்

    சேத்துப்பட்டில் உரம் அதிக விலைக்கு விற்பதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் சுமார் 8-க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது. 

    இங்கு சேத்துப்பட்டு சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய பொருட்களான யூரியா விவசாய இடுபொருட்கள் மருந்து ஆகியவற்றை இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். 

    சேத்துப்பட்டில் உள்ள உரகடைகளில் கடந்த ஒரு மாதமாக யூரியா தட்டுப்பாடு உள்ளது. குறைந்த அளவே யூரியா வருவதால் விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு யூரியா வாங்கி செல்கின்றனர். 

    நேற்று காலை சேத்துப்பட்டில் உள்ள 5 கடைகளில் யூரியா வந்தது. இதை வாங்க சென்ற விவசாயிகளிடம் வழக்கமான விலையை விட யூரியா அதிக விலைக்கு விவசாயிகளிடம் விற்பனை செய்தனர்.

    மேலும் விவசாய இடு பொருட்களை கட்டாயமாக யூரியா வாங்க வரும் விவசாயிகளிடம் இடுபொருட்கள் வாங்கினால்தான் யூரியா தரப்படும் என கட்டாயப்படுத்தி விவசாயிகள் இடுபொருட்கள் மற்றும் யூரியாவை விற்பனை செய்து வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். 

    இதையடுத்து அங்கிருந்து விவசாயிகள் சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அதிக விலைக்கு விற்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என தரையில் அமர்ந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ் மற்றும் வேலு விவசாயிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து உங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள் சாலை மறியல் செய்யக்கூடாது என்றனர். 

    பின்னர் அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்று சேத்துப்பட்டு தாசில்தார் இடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தனர். 
    Next Story
    ×