என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை உழவர் சந்தைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்ட போது எடுத்த படம்.
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தில் திருவண்ணாமலை உழவர் சந்தை முதலிடம்
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தில் திருவண்ணாமலை உழவர் சந்தை முதலிடத்தை பிடித்துள்ளது.
திருவண்ணாமலை:
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு செய்யாத வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்து உழவர் சந்தையில் விற்பனை செய்யும் திட்டம் உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல்படி வேளாண்மைத்துறை ஒத்துழைப்புடன் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை. மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு காய்கறிகளை உணவுமாதிரி எடுத்தும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் உழவர் சந்தை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் திருவண்ணாமலை உழவர் சந்தை தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.அதற்கான நற்சான்று திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநில அளவில் முதலிடத்துக்கு கிடைத்துள்ள இந்த சான்றிதழை திருவண்ணாமலை யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் ஆகியோரிடம் கலெக்டர் முருகேஷ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் காட்டி வாழ்த்து பெற்றனர்.
இந்த சாதனையை நிகழ்த்திய உணதுபாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோரை அமைச்சர்கள் பெரிதும் பாராட்டினர்.
Next Story






