என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 3 தலைமுறைக்கு பின்னர் விழா நடக்கிறது.
    • தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு

    கண்ணமங்கலம்;

    ஜவ்வாதுமலை பகுதியில் பெரியமலை கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி அம்மனுக்கு அலகு நிறுத்தி மகாபாரத திருவிழா நடந்து வருகிறது.

    இதைமுன்னிட்டு தினமும் மேல்நந்தியம்பாடி சம்பத் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது. நேற்று முதல் தினமும் இரவில் அத்திமூர் மகாபாரத நாடகம் நடந்து வருகிறது.

    வருகிற 10ம்தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது. மறுநாள் 11-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா குறித்து அந்த ஊரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறுகையில்:-

    இத்திருவிழா நடந்து 3 தலைமுறைகளாகிறது.பெரிய மலையில் பஞ்ச பாண்டவர்கள் தங்கிச் சென்ற இடமாகும். எனவே இத்திருவிழாவை ஜவ்வாதுமலை தொடரில் உள்ள அனைத்து கிராம மக்கள் ஒருங்கிணைத்து செய்து வருகிறோம். என்றார்.

    பல ஆண்டுகளுக்குப் பின் திருவிழா நடப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    • பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அம்மூர் ரோடு செல்லும் சாலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப இறந்து கிடப்பதாக வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்து போன வாலிபர் வாலாஜா உலகலந்தர் தெருவை சேர்ந்த கார்த்தி (28) என்பதும் தனியார் பட்டாசு கடையில் கூலி வேலை செய்பவர் என தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • “என் குப்பை என் பொறுப்பு” என்று வாசகம்
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் நகராட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான நேற்று அரக்கோணம் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    சைக்கிள் பேரணியை அரக்கோணம் நகரமன்ற தலைவர் லட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் லதா துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகரமன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு, துரை.சீனிவாசன், அரக்கோணம் வியாபாரி சங்கத் தலைவர் அசோகன், சமூக ஆர்வலர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தெள்ளார் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு
    • கொடி ஏற்றப்பட்டது.

    வந்தவாசி

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் தெள்ளார் பஸ் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா யொட்டி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தெள்ளார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.

    பின்னர் தெள்ளார் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், வந்தவாசி நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால், இளங்கோவன், பிரபு, வந்தவாசி நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார், பொறியாளர் அணி செயலாளர் யுவராஜ், திமுக நிர்வாகிகள் மதன்குமார்,கோபிநாத், பிச்சைக்கண்ணு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 38 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
    • அமைச்சர் எ.வ.வேலு அணிவித்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாளையொட்டி 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.

    38 குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி. தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், கலசபாக்கம் தொகுதி தி.சரவணன் எம்.எல்.ஏ திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நின்றிருந்த பஸ் மீது மோதியது.
    • தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கே ஆரணி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஆரணி சென்னை சாலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து ஆரணி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்த பஸ் மீது திடீரென மோதியது.

    இதில் 19 மாணவிகளும், 11 மாணவர்களும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சம்பவம் குறித்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்த சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ மாணவர்களுக்கு ஆறுதல் கூறி டாக்டரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். லேசான காயமடைந்த மாணவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • 97-ம் ஆண்டு பிரமோற்சவ திருவிழா
    • நாளை மறுதினம் தேரோட்டம் நடக்கிறது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகின்றன.

    இந்த கேவிலில் 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளன.

    வரதராஜ பெருமாள் தேர் திருவிழா வருகின்றன 7.06.22 அன்று நடைபெறுவதால் தேரின் தன்மை குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் வருவாய் துறை நகராட்சி துறை மற்றும் போலீசார் ஆகியோர் கோவில் வளாகத்தில் உள்ள தேரை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தேரின் உயரம் அகலம் குறித்து அளவு குறித்தும் பெரியகடை வீதி ஷராப் பஜார் காந்தி ரோடு மார்க்கெட் வீதி உள்ளிட்ட சாலைகளில் அளவுகளை சரிபார்த்து தேர் வருவதற்கான வழிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தாசில்தார் பெருமாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி கோவில் ஆய்வாளர் நடராஜன் நிர்வாக செயலாளர் சிவாஜி வருவாய் ஆய்வாளர் வேலுமணி வி.ஏ.ஒ இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

    • சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.
    • தூய்மை நகரமாக மாற்ற உறுதிமொழி ஏற்பு.

    செய்யாறு:

    முதல்வர் ஆணைக்கிணங்க நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற வகையில் வருடம் முழுவதும் தூய்மை பணியினை நடை முறைப்படுத்தும் தொடக்க விழா நேற்று ஆரணி கூட்டு ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் மோகன் வேலு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ரகுராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ இதில் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் செய்யாறு நகரம் தூய்மை நகரமாக மாற்றும் பொருட்டு தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் நகரை தூய்மை சேவைப் பணி விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்எல்ஏ ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம், அரிமா சங்கம், நகராட்சி அனைத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயிர் சேதம் ஏற்படும் அபாயம்.
    • மின் கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்.

    வந்தவாசி:

    வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் வந்தவாசி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு நடைபயிற்சி செய்வதற்கும் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பூங்காவில் நடைபாதையில் மின் கம்பம் ஒன்று விளக்கு எரிந்த படி கடந்த ஒரு வாரமாக சாய்ந்து கீழே விழுந்து கிடக்கிறது.

    நடைபாதை வழியாக செல்லும் பொதுமக்கள் சாய்ந்து கீழே விழுந்து கிடக்கும் மின்விளக்கு கம்பத்தை கடந்து செல்கின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாய்ந்து கிடக்கும் மின்விளக்கு கம்பத்தை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×