என் மலர்
நீங்கள் தேடியது "Fallen electric pole"
- உயிர் சேதம் ஏற்படும் அபாயம்.
- மின் கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்.
வந்தவாசி:
வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் வந்தவாசி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு நடைபயிற்சி செய்வதற்கும் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பூங்காவில் நடைபாதையில் மின் கம்பம் ஒன்று விளக்கு எரிந்த படி கடந்த ஒரு வாரமாக சாய்ந்து கீழே விழுந்து கிடக்கிறது.
நடைபாதை வழியாக செல்லும் பொதுமக்கள் சாய்ந்து கீழே விழுந்து கிடக்கும் மின்விளக்கு கம்பத்தை கடந்து செல்கின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாய்ந்து கிடக்கும் மின்விளக்கு கம்பத்தை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






