என் மலர்
நீங்கள் தேடியது "Mahabharata drama"
- 3 தலைமுறைக்கு பின்னர் விழா நடக்கிறது.
- தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு
கண்ணமங்கலம்;
ஜவ்வாதுமலை பகுதியில் பெரியமலை கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி அம்மனுக்கு அலகு நிறுத்தி மகாபாரத திருவிழா நடந்து வருகிறது.
இதைமுன்னிட்டு தினமும் மேல்நந்தியம்பாடி சம்பத் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது. நேற்று முதல் தினமும் இரவில் அத்திமூர் மகாபாரத நாடகம் நடந்து வருகிறது.
வருகிற 10ம்தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது. மறுநாள் 11-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா குறித்து அந்த ஊரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறுகையில்:-
இத்திருவிழா நடந்து 3 தலைமுறைகளாகிறது.பெரிய மலையில் பஞ்ச பாண்டவர்கள் தங்கிச் சென்ற இடமாகும். எனவே இத்திருவிழாவை ஜவ்வாதுமலை தொடரில் உள்ள அனைத்து கிராம மக்கள் ஒருங்கிணைத்து செய்து வருகிறோம். என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பின் திருவிழா நடப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.






