என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னதானம் வழங்கிய காட்சி.
வந்தவாசி தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அன்னதானம்
- தெள்ளார் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு
- கொடி ஏற்றப்பட்டது.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் தெள்ளார் பஸ் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா யொட்டி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தெள்ளார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.
பின்னர் தெள்ளார் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், வந்தவாசி நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால், இளங்கோவன், பிரபு, வந்தவாசி நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார், பொறியாளர் அணி செயலாளர் யுவராஜ், திமுக நிர்வாகிகள் மதன்குமார்,கோபிநாத், பிச்சைக்கண்ணு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






