என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய காட்சி
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்
- 38 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
- அமைச்சர் எ.வ.வேலு அணிவித்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாளையொட்டி 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.
38 குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி. தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், கலசபாக்கம் தொகுதி தி.சரவணன் எம்.எல்.ஏ திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






