என் மலர்
திருவண்ணாமலை
- ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு.
- வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் கடந்த 1998ம் ஆண்டு சமத்துவபுரம் அமைத்து பொதுமக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன.
மேலும் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ஓரு வீட்டிற்கு உ இதனால் ஆரணி அருகே உள்ள தச்சூர் ஊராட்சிக்குபட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக சமத்துவபுரத்தில் சங்கம் அமைத்து நிதியை பகிர்ந்து பணியை தொடங்க வேண்டும் என்பது வழக்கம். சமத்துவபுரத்தில் ஒரு தரப்பினர் ஒருதலைபட்சமாக நிர்வாகிகளை தேர்தெடுத்து சங்கம் பதிவு செய்ய முயன்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சமத்துவபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருதலைபட்சமாக அமைக்கபட்ட சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக புகார் மனு அளித்தனர்.
மேலும் பொதுமக்களின் புகாரின் பேரில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலர் திலகவதி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சமத்துவபுரம் பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும்இளைஞர்கள் ஒன்றிணைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.
இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- தனிப்படை போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணமாலை வேங்கிக்கால் ஊராட்சி செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 62). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவர். அவரது மகன் சென்னையில் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ரவிசந்திரன் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது அவர் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 11 தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மர்ம நபர்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்கு கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மனைவி மது குடிக்க பணம் தராததால் விரக்தி
- போலீசார் விசாரணை
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 35). கூலி தொழிலாளி.
இவரது மனைவி சாவித்திரி. இவர் செய்யார் சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். விஜயகுமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சாவித்திரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது விஜயகுமார் பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். அதேபோல் சிறிது நேரத்தில் துணி துவைக்க வைத்திருந்த ரசாயனத்தை எடுத்து குடித்துவிட்டு கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாவித்திரி மற்றும் குடும்பத்தினர் விஜயகுமாரை மீட்டு செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 6 மாதத்திற்கு முன்பு முருகன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
- சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த பாண்டியன் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 33). பஸ் டிரைவர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு முருகன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.
பின்னர் கடந்த 23-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று காலை 7 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தைலம் தோப்பில் நின்று கொண்டிருந்தார்.
அங்கு மறைந்திருந்த சிறுமியின் உறவினர்கள் முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகனை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செய்யார் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்து தலைமறைவாக இருந்த சிறுமியின் உறவினர்கள் தணிகை மலை (வயது 45), வேல்முருகன் (26), தேவிகா (40), சுரேஷ் (21), விக்னேஷ் (19) ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் மனவேதனை அடைந்து கடந்த 6 மாதங்களாக ஆத்திரத்தில் இருந்ததாகவும், ஜாமினில் வெளியே வந்த முருகனை நோட்டமிட்டு வெட்டி கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
- 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27).
இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி (65) என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு பிரபு என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து முருகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காந்தியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான காந்தியின் வீட்டில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் ஏராளமான ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர்.
காந்தி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தன்னை டாக்டர் என்றும், பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்ததாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு தானிப்பாடி பகுதியில் பலருக்கு இதுபோன்ற சிகிச்சைகளை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் காந்தியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரிக்கரை ஓரமாக சென்ற போது விபத்து நடந்தது.
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா மங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45) விவசாயி. இவர் நேற்று மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலை கானலாபாடி ஏரிக்கரை ஓரமாக டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் ஏரியில் கவிந்தது.
இதில் சிக்கி படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 235 கிராம் தங்கம் இருந்தது.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் மலையை சுற்றி கிரிவலமும் சென்று அஷ்டலிங்க சாமிகளையும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில் 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 683 ரூபாயும், 235 கிராம் தங்கமும், ஒரு கிலோ 79 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- 750 பெண்களுக்கு அன்னக் கூடை.
- ஜோதி எம்.எல்.ஏ வழங்கினார்.
செய்யாறு:
செய்யாறு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாபொதுக்கூட்டம் செய்யாறு அருகே உள்ள வாழ்குடை கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
செய்யாறு ஒன்றியக்குழு தலைவர் என். வி. பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆர். வெங்கடேஷ் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு ஒன்றிய குழு துணை தலைவர் ஆர். வி. பாஸ்கரன் வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர்கள் நாகை நாகராசன், சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் எம்எல்ஏ ஜோதி 750 பெண்களுக்கு அன்னக் கூடைவழங்கினார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இறுதியாக ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேலு நன்றி கூறினார்.
மேலும் கூட்டத்தில் நகர செயலாளர் விஸ்வநாதன், நகர மன்றத் தலைவர் மோகன வேலு, முன்னாள் நகர் செயலாளர் சம்பத், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கள் பூங்கொடி பார்த்திபன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஒருவர் கைது.
- போலீசார் விசாரணை.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன்கள் லோகேஷ், ராகுல் ஆகியோருடன் கடந்த 25ம்தேதி இரவு நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்த்து விட்டு இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் ராமச்சந்திரபுரம் குளம் அருகே இருந்த ரெட்டிபாளையம் சுரேஷ், நவீன், சிங்கிரிகோயில் சூரியா, மேல்கல்பட்டு மோகன்ராஜ் ஆகியோரிடம் வழிவிடும் படி கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து, சிவக்குமார், ராகுல், லோகேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த 3 பேரூம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து லோகேஷ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்ததார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். நவீன், சுரேஷ், சூரியா ஆகியோரை தேடி வருகின்றனர்.
- வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
- கலெக்டர் முருகேஷ் உத்தரவு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு களை பாகுபாடுயின்றி அனைத்தையும் அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கலெக்டர் முருகேஷ் பேசியதாவது கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பஞ்சாயத்துகளில் கடந்த 2016 -17 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு முதல்கட்ட தொகையை 26 ஆயிரம் வழங்கியும் இதுவரைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளன.
இப்பணிகளை வரும் ஜூலை 10 தேதிக்குள் தொடங்கி 2 மாதத்திற்கு உள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பயனாளிகளுக்கு இடம் சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் இருப்பின் இதற்கு தாசில்தார் உடனடியாக அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பயனாளிகள் இறந்து இருப்பின் அதற்கு பதிலாக மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இப்பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் பயனாளிகள் தாங்கள் பெற்றுள்ள 26 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் அரசு பணத்தை பெற்றுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன.
எனவே பயனாளிகள் உடனடியாக அரசு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆய்வுக் கூட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொள்ளாததற்கு மிகவும் வருத்தமாக உள்ளன.
என்னை சந்திக்க திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர் ஆனால் நான் உங்களை நாடி நேரடியாக இங்கே வந்து இருந்தோம் தங்கள் வராதது மிகவும் வேதனையாக உள்ளது.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாராபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கடுமையாக உள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எக்காரணம் கொண்டும் யாருடைய தலையீடும் இல்லாமல் முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அதனால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் முருகேஷ் கூறினார்.
அப்போது கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, கோவிந்தராஜூலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 100 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.
- ஆசிரியர்கள் பாராட்டினர்.
செய்யாறு:
தமிழகத்தில் பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் கே.கிஷோர் குமார் வரலாறு படத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்துள்ளார்.
மேலும் அதே பள்ளியில் கிஷோர் குமார் 600க்கு551 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், எம். ஹேமநாத்534 மதிப்பெண் எடுத்து 2ம் இடத்தையும், வி. கார்த்திகேயன் 484 மதிப்பெண் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழக அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்த கிஷோர் குமார் உள்ளிட்ட 3 மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் அசோக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
- உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு வேட்டகிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30) இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27ம்தேதிமீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதனால் மன உளைச்சளுக்கு ஆளானார். பின்னர் பயிருக்கு அடிக்க வைத்திருந்தபூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் விஜயலட்சுமியை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசில் பழனி புகார் செய்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






