என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அரசு உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார்
    • போலீஸ் விசாரணை

    போளூர், ஜூலை.3-

    திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் அரசவெளி கிராமத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது‌.

    இந்தப் பள்ளியில் நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த செவத்தான் மகன் சிவகாசி (வயது 15) என்ற சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சிவகாசிக்கு முகத்தில் முகப்பரு வந்து சீழ் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஆசிரியை மகாலட்சுமி அதை சுத்தம் செய்துள்ளார். பின்ன சிவகாசியின் தந்தை செவத்தானுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் அங்கு வந்த செவத்தான் தனது மகனை நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சென்று காட்டுங்கள் என கூறினர். தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காட்டிய போது டாக்டர்கள் சிவகாசி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செவத்தான் ஜமுனா மரத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் எப்படி இறந்தான் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சின்னசந்தவாசலை சேர்ந்தவர். சுப்பிரமணி (வயது 40) இவர் வேலூர் செல்லும் ரோட்டில் சந்தனக் கொட்டாய் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் 10 ஆண்டுகளாக சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி சுப்பிரமணி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே கம்ம வான்பேட்டையிலிருந்து கணியம்பாடி நோக்கி சென்ற பைக் இவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி மகன் ராஜ்குமார் வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
    • ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம்.

    திருவண்ணாமலை:

    மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால் காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழக அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்தவித சிரமும் இன்றி தங்களின் உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்பிக்கலாம்.

    இதற்கு ஓய்வூதியதாரர்கள் சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் ஆதார் நகல், மொபைல் எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதிய கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தபால்காரரிடம் சமர்பிக்க வேண்டும்.

    பின்னர் கை விரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும்.

    மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஓய்வூதியதாரர்கள் அஞ்சல் துறையால் வழங்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்து உள்ளார்.

    • 439 பள்ளி வாகனங்கள் ேசாதனை செய்யப்பட்டது.
    • குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தப்படும் பஸ்கள், வேன்கள் ஆகிய வாகனங்கள் நேற்று மாவட்ட அளவிலான குழுவினரால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, இருக்கைகள், ஆபத்து காலத்தில் வெளியேறும் கதவு, கண்காணிப்பு கேமிரா, வாகனத்தில் படிகளின் உறுதி தன்மை போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் தனியார் பள்ளி வேன் ஒன்றினை ஆய்வு செய்யும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஓட்டி பார்த்தார். இதில் 439 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் 47 பள்ளி வாகனங்களில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அக்குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினரால் பள்ளி வாகனங்களில் தீ பிடிக்கும் நிலை ஏற்பாடுமாயின் தீயினை கட்டுப்படுத்தப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் 108 ஆம்புலன்சு இயக்கும் பணியாளர்களால் பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய முதலுதவி குறித்த நடவடிக்கைகள் குறித்த செய்முறை செய்து காணப்பிக்கப்பட்டது.

    ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, சுந்தரராஜன், முருகவேல், தாசில்தார் சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தனியார் பள்ளியை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் வாட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்யாறு:

    செய்யாறு ஊராட்சி ஒன்றியம், வட தண்டலம் கிராமம் கன்னிகாபுரம் பகுதியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலையை நேற்று ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கவுன்சிலர் ஞானவேலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி செய்யாற்றை வென்றான் கிராமத்தில் வெறி நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியானதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளர் கலைமணி குடும்பத்தாருக்கு ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்

    வெம்பாக்கம், ஜூலை.2-

    காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய சாரதி (வயது 37). இவர் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொகுப்பு ஊதிய ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள் உள்ளனர்.

    இவர் திருவண்ணாமலை வேலைக்கு சென்று வருவது வழக்கம் இதேபோல் நேற்று காலை பைக்கை அப்துல்லாபுரம் கூட்டு சாலை விட்டு பஸ்ஸில் திருவண்ணாமலைக்கு சென்று இரவு அப்துல்லா புரம் கூட்டு சாலையில் இறங்கி பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அப்துல்லாபுரம் மின்வாரியம் அலுவலகம் எதிரே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது, இதில் விஜயசாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து இவருடைய மனைவி தூசி போலீசில் கொடுத்த புகார் மீது இன்ஸ்பெக்டர் முரளிதரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
    • துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

    திருவண்ணாமலை:

    கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட சீலபந்தல் மதுரா புதுமன்னை கிராமத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துலை கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

    இதனை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்து பேசியதாவது:- அவர் பேசுகையில் இப்படி ஒவ்வொரு அடிப்படை வசதிகளையும் மக்களுக்காக மக்களின் தேவை அறிந்து செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதனை வீணாக்காமல் பொது சொத்து என்று கருதாமல் நமது என்று நினைத்து பயன்படுத்த வேண்டும் மேலும் கிராமப்புறங்களில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் வீடுகளை உடனுக்குடன் கட்டி முடியுங்கள்.

    தமிழக அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள் அப்படி நிறைவேற்றினால் தான் தமிழக அரசின் சாதனைகள் தொடரும். இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாமலை பீடிஓக்கள் கிருஷ்ணமூர்த்தி விஜயலட்சுமி யூனியன் கவுன்சிலர் ஏழுமலை பஞ் தலைவர் யசோதா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மழையால் பாதிப்பு.
    • மின்சப்ளை மாற்றி வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் புதிய சாலை மெயின்ரோடு அங்காளம்மன் கோயில் எதிரே உள்ள மின் கம்பங்களில் செல்லும் மின் வயர்களை மின் பணியாளர்கள் நேற்று முன்தினம் மாற்றினர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் காலை 10 மணி அளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம், மணிக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வியாபாரிகள் மின் சப்ளை இன்றி அவதிக்குள்ளாகினர்.

    மேலும் இரவு நேரத்தில் மழை காரணமாக தடை செய்யப்பட்ட மின்சாரம், இரவு 9 மணி அளவில் வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் துணை மின் நிலையத்திற்கு (அழகுசேனை சூளைமேடு பகுதியில் உள்ள) சந்தவாசல் 110/11கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் சந்தவாசல் பகுதியில் மழை பெய்யும் போது மின் தடை செய்யப்பட்டால் மீண்டும் மின் சப்ளை கிடைக்க காலதாமதமாகிறது. எனவே சந்தவாசலில் மின் தடை செய்யும் போது, கண்ணமங்கலம் துணை மின் நிலையத்திற்கு அருகே உள்ள அனந்தபுரம் அல்லது கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்கள் வழியாக பேக் அப் எனப்படும் மின் சப்ளை வழங்கிட மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தம்பதியினர் வாக்குவாதம்
    • சமூக வளைதலங்களில் வீடியோ வைரல்.

    ஆரணி:

    திருவ ண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது.

    இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிட்டனர்.

    மேலும் மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பேரதிர்ச்சியாக சாப்பிட்ட பிரியாணியில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் கடையின் ஊழியரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைரலாக பரவியது. சமூக வளைதலங்களிலும் பரவி வருகின்றன.

    ஆரணியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன் சிறுமி ஆகிய 2 பேர் உயிரழந்த சம்பவம் நடந்தது.

    நேற்று நடந்த இச்சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் கண்துடைப்புக்கு ரெய்டு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களின் வலியுறுத்தி உள்ளனர்.

    • கடும் வாக்குவாதம்
    • சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

    வந்தவாசி, ஜூலை.2-

    வந்தவாசி அடுத்த தெள்ளாரில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் வணிகவியல் துறை மாணவர்களுக்கும் வேதியியல் துறை மாணவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை எடுத்து கல்லூரி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு இடையே மோதலில் ஈடுபட்ட காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் வந்தவாசி பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
    • பொதுமக்கள் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் இந்த மழையின் காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மழையால் மின் தடை செய்யப்பட்டது என்று மின்வாரி அலுவலர்கள் கூறினர்.

    பின்னர் இரவு 8.45 மணி அளவில் மின் சப்ளை வழங்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • விவசாய நிலத்திற்கு சென்ற போது விபரீதம்.
    • போலீசார் விசாரணை.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், (வயது 65). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் சேத்துப்பட்டு பழம்பேட்டை, பகுதியில் உள்ளது.

    இவர் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று இவரை கடித்தது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனே இவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு ஜெயராமனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை அடுத்துஜெயராமன், மகன் ரமேஷ், சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×