என் மலர்
நீங்கள் தேடியது "ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்"
- கடும் வாக்குவாதம்
- சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு
வந்தவாசி, ஜூலை.2-
வந்தவாசி அடுத்த தெள்ளாரில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் வணிகவியல் துறை மாணவர்களுக்கும் வேதியியல் துறை மாணவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை எடுத்து கல்லூரி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு இடையே மோதலில் ஈடுபட்ட காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் வந்தவாசி பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.






