search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital Survival Certificate"

    • புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
    • ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம்.

    திருவண்ணாமலை:

    மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால் காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழக அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்தவித சிரமும் இன்றி தங்களின் உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்பிக்கலாம்.

    இதற்கு ஓய்வூதியதாரர்கள் சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் ஆதார் நகல், மொபைல் எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதிய கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தபால்காரரிடம் சமர்பிக்க வேண்டும்.

    பின்னர் கை விரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும்.

    மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஓய்வூதியதாரர்கள் அஞ்சல் துறையால் வழங்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்து உள்ளார்.

    ×