என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 15 பவுன் நகையை அள்ளிசென்றனர்
    • கதவை உடைத்து துணிகரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வானவில் நகர் 4-வது தெருவை சேர்ந்த வர் கண்ணன் (வயது 52). இவர் தனியார் ஓட்டலில் காவலா ளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்து வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக் கப்பட்டிருந்த 15 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா சேலரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 31).

    இவர் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை செய்யாறுக்கு வந்த இவர் பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    ஆற்காடு சாலையில் ஆதிபராசக்தி கோவில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறியதில் அவர் கீழே விழுந்தார்.

    அப்போது எதிரில் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார் ராஜேஷ் .

    பின்னர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உறவினர் பிரபாகரன் கொடுத்த புகாரின்பே ரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நிற்காமல் சென்றதால் ஆத்திரம்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை - வேலுார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் ஊசாம்பாடி கிராமம் உள்ளது. இங்கு 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் எல்லா தேவைகளுக்கும் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்குதான் செல்லவேண்டும்.

    நேற்று மதியம் வேலுாரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கண்டக்டருக் கும், பயணிகளுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதன்பிறகே திருவண் ணாமலை தாலுகா போலீ சார் அங்கு வந்து, சுதந்திர தினத்தன்று கூட மறியலில் ஈடுபட்டால் எப்படி? மேலும் சாலையின் இரு புறமும் பல கி.மீ. தொலை வுக்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது என கூறினர்.

    ஊசாம் பாடியைச் சேர்ந்த 5 பேர் போளூரில் பஸ் ஏறி ஊசாம் பாடிக்கு டிக்கெட் எடுத் துள்ளனர். அப்போது கண் டக்டர், "அங்கு பஸ் நிற்காது, டிரைவரிடம் போய் சொல்லுங்கள்" என கூறியுள்ளார்.

    "டிக்கெட் வாங்கியது நீங்கள்தான். நாங்கள் ஏன் டிரைவரிடம் சொல்ல வேண்டும்?" என தகராறு செய்ததால், ஊசாம்பாடி யில் பஸ் நிறுத்தப்பட்டது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, "பிரச் னைக்கு உள்ளான பஸ்சை மட்டும் நிறுத்துங்கள். மற்ற வாகனங்கள் செல்லட்டும்"என போலீசார் கூறினர்.

    அதை ஏற்று, 225 நம்பர் பஸ்சை மட்டும் சிறை பிடித்த மக்கள், மற்ற வாக னங்கள் செல்ல அனுமதித்தனர்.

    அதன்பிறகே, திருவண்ணாமலை போக்குவரத்து அலுவல கத்திலிருந்து டிப்போ மேலாளர் கலைச்செல்வன் மதியம் 2.30 மணிக்கு அங்கு வந்தார்.

    தொடர்ந்து, "நாளையி லிருந்து (இன்று) 225 என்ற எண் கொண்ட' எல்லா பஸ்களும் ஊசாம்பாடியில் கட்டாயமாக நின்று செல்லும். அப்படி நிற்கா மல் செல்லும் பஸ்கள் மீது என்னிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றார். அதை ஏற்று அரசு பஸ்சை மக்கள் விடுவித்தனர்.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள இராமாபுரம், கிராமத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி. இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, சிவா ஷர்மா, அய்யர் குழுவினரால், 108 கலசம் வைத்து, விநாயகர் பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து. மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

    • ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது.
    • அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முக்குரும்பை ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை (வயது 52) என்பவர் பதவி வகித்து வந்தார்.

    தி.மு.க. பிரமுகரான இவர் இன்று அதிகாலை களம்பூர் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு முக்குரும்பை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது.

    இதில் அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனையில் அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    75-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் பி.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சமாதான புறாக்கள் வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.

    இதைத்தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டம் விபத்து நிவாரணத் தொகை  ப்பட்டா, பயிர் விளைச்சலில் முதல் பரிசு திரவ உயிர் உறவும் விசைத்தெளிப்பான் உட்பட 781 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சத்து 94,654 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • திரளமான பக்தர்கள் பங்கேற்பு

    செங்கம்:

    செங்கம் நகரில் போளூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. கோவிலின் வளாகத்தில் நேற்று துரியோதனன் வடிவில் பிரம்மாண்டமான மண் சிற்பம் அமைக்கப்பட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை கோவிலின் வளாகத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக திருக்கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி விழா நடந்தது
    • பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதூர் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டை அடித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் புதூர் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலின் உள் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து கோழிகளை நேர்ந்து விட்டு வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோவிலில் பால் ஊற்றி முட்டைகள் வைத்தும் வழிபட்டனர்.

    • அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் சென்றுவர சிரமம் ஏற்படும் என குற்றச்சாட்டு
    • பள்ளி மாணவர்கள் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விரைவில் திறக்க முன்னேற்பாடு சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவண்ணாமலை அடுத்த முனியந்தல் சத்திரம் பகுதியில் திருவண்ணா மலையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்க சாவடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது

    இதற்கு அப்போதே பொதுமக்கள் திருவண்ணாமலை நகரை ஒட்டி சுங்க சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் பணி நடைபெறாமல் நிலுவையில் இருந்து வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பணி துரிதப் படுத்தப்பட்டு முடிக்கப்பட்டு இரண்டு நாட்களாக வாகனங்களை சோதனை ஓட்டமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு வசூல் செய்ய ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுங்கவரி கட்டணமாக கார், வேன்களுக்கு சென்று வர 50 ரூபாய், கமர்சியல் வாகனங்களுக்கு 80 ரூபாய், பஸ் மற்றும் லாரிகளுக்கு 165 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்

    மேலும் சாலைகளை முறையாக மேம்படுத்த வேண்டும் சுங்க சாவடியின் அருகாமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கலெக்டர் அலுவலகமும், கோர்ட்டு வளாகமும் மற்றும் தனியார் பள்ளிகளும் அமைந்துள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்

    இதனால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படும் மேலும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதற்கும் பள்ளி மாணவர்கள் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படும்.

    15 கி.மீ. தள்ளி அமைக்க வேண்டும்

    இதனால் சுங்குச்சாவடியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேளதாளம் முழங்க புனிதநீர் கொண்டுவரப்பட்டது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் அனாதிமங்கலம், கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் ஊர் காத்த காளியம்மன், கோவில் புதியதாக கட்டி, கோவில் முன்பு மண்டபம் கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108, கலசம் வைத்து. கோ பூஜை, தம்பதி பூஜை, விநாயகர் பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு.

    பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க 11 வகை வரிசை தட்டுடன் கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் காத்த காளியம்மன் வகையறா காரர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
    • மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தூசி கே. மோகன் தலைமை வகித்தார்.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன், நகர செயலாளர் கு. வெங்கடேசன், நகர அவை தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 75-வது சுதந்திர தின தேசியக் கொடியை ஏற்றினார்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், பெண்களுக்கு சேலையும், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன், மகேந்திரன், குணசீலன், துரை, ஜாகிர் உசேன், கோவிந்தராஜ், சுரேஷ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்
    • வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்

    திருவண்ணாமலை:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் வணிக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மத்திய மாநில அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெருக்கள் தேசிய கொடிகளாக காட்சியளிக்கின்றன.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக போற்றப்படும் அண்ணாமலை உச்சியின் மீது ஏறி சென்று சிலர் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பஸ் நிலையத்தில் சுமார் 100 அடி நீளத்துக்கு தேசிய கொடி கட்டப்பட்டுள்ளது.

    ×