என் மலர்
நீங்கள் தேடியது "Toll collection should be stopped"
- அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் சென்றுவர சிரமம் ஏற்படும் என குற்றச்சாட்டு
- பள்ளி மாணவர்கள் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விரைவில் திறக்க முன்னேற்பாடு சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த முனியந்தல் சத்திரம் பகுதியில் திருவண்ணா மலையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்க சாவடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது
இதற்கு அப்போதே பொதுமக்கள் திருவண்ணாமலை நகரை ஒட்டி சுங்க சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் பணி நடைபெறாமல் நிலுவையில் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பணி துரிதப் படுத்தப்பட்டு முடிக்கப்பட்டு இரண்டு நாட்களாக வாகனங்களை சோதனை ஓட்டமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு வசூல் செய்ய ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுங்கவரி கட்டணமாக கார், வேன்களுக்கு சென்று வர 50 ரூபாய், கமர்சியல் வாகனங்களுக்கு 80 ரூபாய், பஸ் மற்றும் லாரிகளுக்கு 165 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்
மேலும் சாலைகளை முறையாக மேம்படுத்த வேண்டும் சுங்க சாவடியின் அருகாமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கலெக்டர் அலுவலகமும், கோர்ட்டு வளாகமும் மற்றும் தனியார் பள்ளிகளும் அமைந்துள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்
இதனால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படும் மேலும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதற்கும் பள்ளி மாணவர்கள் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படும்.
15 கி.மீ. தள்ளி அமைக்க வேண்டும்
இதனால் சுங்குச்சாவடியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






