என் மலர்
திருவண்ணாமலை
- ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டப்படுகிறது
- பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது
கலசப்பாக்கம்:
கலசப்பாக்கம் தொகுதிகுட்பட்ட ஜவ்வாதுமலை பஸ் நிலையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் நிழற்கூடத்தை சரவணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-
எனது தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் எம்பி நிதியின் கீழ் ரூ. 15 லட்சமும் எம்எல்ஏ நிதியின் கீழ் ரூ. 15 லட்சமும் என 30லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் திறப்பு விழா செய்யப்படும் .
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கோவிலூர் கானமலை நம்மியம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ. 2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைத்தால் ரேஷன் கடை கட்டுதல் பக்க கால்வாய் அமைத்தல் சிமெண்ட் சாலை ஆகிய பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலூர் நம்மியம்பட்டு கானமலை ஆகிய பகுதிகளில் பாழைந்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையிலும் இருந்து வரும் பள்ளி கட்டிடங்களை சரிசெய்வதற்காக ரூ. 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
ஜவ்வாதுமலையை பொறுத்தவரை அனைத்து சாலைகளையும் புதிதாக போடுவதற்கு மாவட்டத்தின் அமைச்சர் ஏவா வேலு பரிந்துரை செய்துள்ளார்.
இதனால் ஜவ்வாது மலை ஒன்றியம் முன்னேற்ற பாதையில் செல்கிறது இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தினர்
- கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுகிறது.
திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் நீர் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.
இந்த விழாவின்போது அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விழா குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9.8.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும். விநாயகர் சிலை வைக்க உள்ளவர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட உதவி கலெக்டரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் https://Tiruvannamalai.nic.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உதவி கலெக்டரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின்பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- சென்னை ஆவின் கூடுதல் ஆணையர் ஆரணி பால் கூட்டுறவு சங்க பெண் தலைவர் குமுதவள்ளியின் பதவியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் குமுதவள்ளி தலைவராகவும் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினராக இருந்தனர்.
கடந்த 2019-20-ம் ஆண்டு இந்த பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பாலை சென்னை அலுவலகம் திருப்பி அனுப்பியது.
இது சம்பந்தமாக ஆவின் நிறுவனம் அபராதம் விதித்தது. இதனையடுத்து பால் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை, பால் கொள்முதல் உள்ளிட்டவைகளில் சங்க தலைவர் குமுதவள்ளி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்க உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் தனி பிரிவு மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவைகளில் புகார் மனு அளித்தார்.
இது தொடர்பாக சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின்பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பால் கொள்முதல் செய்தது. நிர்வாகத்தில் பணம் கையாடல் பாலில் தண்ணீர் கலந்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தன.
இதனையடுத்து சென்னை ஆவின் கூடுதல் ஆணையர் ஆரணி பால் கூட்டுறவு சங்க பெண் தலைவர் குமுதவள்ளியின் பதவியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 16 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவரை திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 21) என்பவர் காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார்.
இதனால் முத்துக்குமார் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி மற்றும் அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் அம்பேத்கர் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த உறவினரை அவர்கள் அசிங்கமாக பேசி தாக்கினர். இதையடுத்து அந்த மாணவியை முத்துக்குமார் கீழே தள்ளி தாக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை தடுக்க வந்த மாணவியின் தாயாரை அவர்கள் ஆபாசமாக பேசினர். மேலும், அவரிடம் உனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டுச் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.
- சிலை வடிவமைப்பாளர்கள் கோரிக்கை
- 10 சதவீதம் முதல் 20 சதவீதம் விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளது
ஆரணி:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோன காலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கபட்டது.
தற்போது 2ஆண்டுகள் கழித்து இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் முள்ளிபட்டு கண்ணமங்கலம் ஓண்ணுபுரம் கொளத்துர் குன்னத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சிலை வடிவமைப்பாளர் தொழிலை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதித்தன.
தற்போது கொரோனா தடை தளர்வு செய்து இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாட உள்ளனர்.தமிழக மட்டுமட்டுமின்றி ஆந்திரா கர்நாடக மும்பை கல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விநாயகர் பண்டிகை கொண்டாடுவார்கள்.
விநாயகர் சிலை வடிவமைப்பாளர் கோரிக்கை.
சிலை வடிவமைப்பு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிலை விற்பனை அமோக நடைபெறும் என்றும் நம்பி விநாயகர் சிலையை செய்து வருகின்றோம்.
விநாயகர் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கிய தமிழக அரசு 10அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் எங்களிடம் விநாயகர் சிலை 15 அடி 20அடி சிலைகள் செய்ய பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆர்டர் வழங்கி வருகின்றனர்.
விநாயகர் சிலை செய்ய களிமண் உள்ளிட்ட மூலபொருட்கள் விலை தற்போது உயர்ந்துள்ளதால் சிலைகள் விலை தற்போது 10 சதவீதம் முதல் 20சதவீதம் விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளன.
உடனடியாக தமிழக அரசு 10அடிக்கு மேல் விநாயகர் சிலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் சிலை வடிவமைப்பாளர் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளதால் சிலை வடிவமைப்பாளர்கள் நலவாரியம் அமைத்து வாழ்வதாரம் மேம்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று சிலை வடிவமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- கவுன்சிலர்கள் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நேற்று பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இக்கூட்டத்தில் தலைவர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரித்து பட்டு நகரமான ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுப்பது கண்ணமங்கலம் பகுதியில் மனைப்பிரவில், பேரூராட்சிக்கு திறந்த வெளிபூங்கா, சாலை வசதி அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
- சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
வந்தவாசி :
வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னாவரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி செயலர் காலி பணியிடத்துக்கான நேர்காணலில் பங்கேற்றாராம்.
இந்த நிலையில் அந்த பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்து நந்தினி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நந்தினி கூறியதாவது:
சென்னாவரம் ஊராட்சி செயலர் பணிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நேர்காணலில் பங்கேற்றேன். அப்போது, அந்த ஊராட்சியில் தகுதியான விண்ணப்பதாரர் இல்லாவிட்டால் அந்த ஊராட்சி எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சியை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர் என நிபந்தனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி சென்னாவரத்தை ஒட்டியுள்ள பிருதூர் ஊராட்சியை சேர்ந்த எனக்குத்தான் இந்த பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் வேறு ஒரு ஊராட்சியை சேர்ந்தவருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவலறிந்தோம்.
எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்ததின் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாைல மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்ததாக விரக்தி
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). இவர் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக காளியப்பன் மீது போளூர் மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுத்தனர்.
இதில் காளியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமினில் காளியப்பன் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததிலிருந்து சரிவர சாப்பிடாமல், தூங்காமலும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார்.
காளியப்பன் மிக மனவேதனையுடன் குடும்பத்தாரிடம் நான் செய்யாத தவறுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நான் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் இப்படி நடந்துள்ளது எனக்கு மிகவும் மன வேதனையாகவும், வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறிவந்து உள்ளார்.
இந்த நிலையில் காளியப்பன் நேற்று தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக அவரது மனைவி விஜயா கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதில் செய்யாத குற்றத்திற்காக எனது கணவர் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவில் இயக்கப்படுகிறது
செய்யாறு:
செய்யாறில் இரு வழித் தடங்களில் செல்லும் அரசு பஸ்களை எம்.எல்.ஏ.ஓ.ஜோதி வியாழக்கிழமை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வேலூருக்கு இரவு நேர பஸ் தடம் எண்.201, நகர பஸ் எண். 56ஏ செய்யாறு - பிரம்மதேசம் - புலிவலம் - சுனைப்பட்டு ஆகிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்யாறு பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து துறை துணை மேலாளர்கள் (தொழில்நுட்பம்) ரகுராமன், (வணிகம்) எஸ் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஓ ஜோதி பங்கேற்ற இரு பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆயிரம் ரூபாய்க்கு பயணச்சீட்டு பெற்று சிறிது தூரம் பஸ்ஸை ஒட்டி சென்றார்.
நிகழ்ச்சியில் கிளை மேலாளர் எஸ் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் வெம்பாக்கம் டி. ராஜு, அனக்காவூர் திலகவதி ராஜ்குமார், மண்டல பொதுச் செயலாளர் எஸ். சௌந்தரராஜன் மண்டல பொருளாளர் எஸ். மோகனரங்கன், மண்டல தலைவர் கே துரைசாமி, பணிமனை செயலாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், ஏ.ஞானவேல், விஜயபாஸ்கர், சின்னதுரை, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமினில் காளியப்பன் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததிலிருந்து சரிவர சாப்பிடாமல், தூங்காமலும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
- இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார்.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). இவர் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக காளியப்பன் மீது போளூர் மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுத்தனர்.
இதில் காளியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமினில் காளியப்பன் வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததிலிருந்து சரிவர சாப்பிடாமல், தூங்காமலும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார்.
காளியப்பன் மிக மனவேதனையுடன் குடும்பத்தாரிடம் நான் செய்யாத தவறுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நான் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வுபெறும் நிலையில் இப்படி நடந்துள்ளது எனக்கு மிகவும் மன வேதனையாகவும், வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறிவந்து உள்ளார்.
இந்த நிலையில் காளியப்பன் நேற்று தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக அவரது மனைவி விஜயா கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதில் செய்யாத குற்றத்திற்காக எனது கணவர் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
- வயலில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). இவரது மனைவி கற்பகம்.இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்ல வதற்காக அந்தப் பகுதியில் விவசாய நிலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது வீரமுத்து அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார கம்பி அறுந்து விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் புதிய மின்மாற்றி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்ட செயற்பொறியாளர் மீனா குமாரி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, தெள்ளார் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், வட்ட அதிகாரி மீனா குமாரி, உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி மின் பொறியாளர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






