என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 2 நாட்கள் நடக்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஒன்றியம் நெடுங்குணம், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள குறுவள மையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு, இரண்டு நாள் கருத்தாளர், பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமிற்கு பெரணமல்லூர், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலாவளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் விஜயலட்சுமி, வரவேற்றார்.முகாமில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், ஆகிய பாடங்கள் மற்றும் என்னும், எழுத்து, குறித்து பயிற்சியாளர் ஆசிரியர் சோபியா, பயிற்சி அளித்தார்.

    மேலும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்குணசேகரன், சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும் அவர் பேசுகையில் கொேரானா காலகட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறன் மிகவும் குறைந்து விட்டது.

    தமிழக அரசு சிறப்பு திட்டமான இல்லம் தேடி கல்வி மூலம் மாணவர்கள் இல்லங்களுக்கு சென்று தினமும் தன்னார்வலர்கள் மூலம் என்னும், எழுத்தும், வகுப்புகள் எடுக்கப்பட்டு, இப்போது மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் அதிகரித்துள்ளது.

    மேலும் இதன்மூலம் கற்றல் திறன் அதிகரித்து அதிக அளவில் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து அரசின் திட்டங்களை பயன்பெற வேண்டும் என்று பேசினார்.

    இதேபோல் பெரணமல்லூர், மேலதாங்கல் மடம், ஆவணியாபுரம், நமத்தோடு, வல்லம், பெரிய கொழப்பலூர், உள்பட 8 குறுவள மையங்களில் இல்லம் தேடி கல்வி தன் னார்வலர்களுக்கு கருத்தாளர் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் பெரணமல்லூர் வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, நன்றி கூறினார்.

    • காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு மற்றும் சாத்துமதுரை ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சாத்துமதுரை, கட்டுபடி, நெல்வாய், கணியம்பாடி, துத்திப்பட்டு, சோழவரம், நாகநதி, சாம்கோ, வல்லம், வரகூர்புதூர், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, சலமநத்தம், மோட்டுப்பாளையம், கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர், கீழ் அரசம்பட்டு மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    கீழ்பென்னாத்தூரில் உள்ள 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், இராஜாதோப்பு, நெடுங்காம்பூண்டி, மேட்டுபாளையம், கொளத்தூர், இராயம்பேட்டை, ஆண்டாளூர், நல்லாண்பிள்ளை பெற்றாள், காட்டு சித்தாமூர், சிறுநாத்தூர், நாரியமங்கலம், கனபாபுரம், கழிகுளம், சோமாசிபாடி, சோ.நம்மியந்தல் ஆராஞ்சி, வழுதலங்குணம், மேக்களூர் மற்றும் சுற்றுப்புறச் சூழலை பகுதியில் உள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ராஜசேகரன் (இயக்குதல் - பராமரித்தல்) தெரிவித்தார்.

    • தங்க நகை, வெள்ளி பொருட்கள் கணக்கிடப்படுகிறது
    • ஆடிவெள்ளிக்கிழமைகளையொட்டி அதிகளவிலான பக்தர்கள் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி விழா 5 வாரங்கள் நிறைவு பெற்றது.

    இதையடுத்து கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்கள் நேற்று காலை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

    படவேடு இந்தியன் வங்கி அலுவலர்கள் மற்றும் 100க்கும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    தற்போது வரை உண்டியல் எண்ணும் பணி நடந்து வருகிறது. சுமார் 40 லட்சம் மதிப்பில் பணமும், காணிக்கை தங்க நகைகள், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு நகைமதிப்பீட்டாளர் மூலம் தெரியவரும் என செயல் அலுவலர் சிவஞானம் தெரிவித்தார்.

    உண்டியல் பணம் எண்ணும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் நடராஜன், சாந்தி, கோயில் மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

    • விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி, கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மகன் தருண், (வயது 7). தருண் கெங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தருண் கடந்த 19-ந் தேதி கெங்கை சூடாமணி, கிராமத்தில் உள்ள மருத்துவம்பாடி கூட்ரோடு பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தான்.

    அப்போது ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கி அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி தருண், மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தருண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தால் மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தருணை, மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தருண், பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாணவனின் பாட்டி பூபதி அம்மாள், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து. விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது
    • கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அவதி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகர் ஆரணி பாளையம் கொசப்பாளையம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    பலத்த மழை

    இதில் பெரியார் நகர் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீட்டு உபயோக பொருட்களான டிவி பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக சாதனங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    வீட்டுக்குள் வெள்ளம்

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவு நீரும் கலந்ததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவதி குள்ளாயினர்.

    ஆரணி டவுன் பகுதியில் சுமார் 1 மணி நேரம் தொடர் மழை காரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இனிவரும் காலங்கள் மழைகாலம் என்பதால் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாய் அடைப்புகளை சரி செய்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் செல்லாமல் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • 135 மாணவர்கள் படித்து வருகின்றனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள கரிப்பூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1முதல் 8ம் வகுப்பில் 135, மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளி கட்டிடம் மிகவும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது.மேலும் கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால், ஆரணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம், மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், கொண்ட புதிய பள்ளி கட்டிடமும், மேலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், ஆகியவை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவிற்கு ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ், தலைமை தாங்கினார்.

    மேற்கு ஆரணி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், கரிப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்பு வழங்கி மாணவர்களிடையே பேசினார்.

    முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று களை நட்டார். விழாவில் ஆரணி நகர மன்ற துணைத்தலைவர் பாரி பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், பூங்கொடி திருமால், ஒன்றியகுழு உறுப்பினர் கணேசன், கரிப்பூர் கிளை கழக செயலாளர் தணிகைவேல், மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வந்தவாசி ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
    • டெண்டர்கள் விடப்படாமல் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை கண்டித்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஒன்றிய குழு கூட்டத்திற்கு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூட்டத்தை உரிய நேரத்தில் தொடங்கவில்லை என வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட மக்கள் இடத்தில் டெண்டர்களை விடப்படாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் ஒன்றிய குழு துணை தலைவர் விஜயன்,சக்திவேல், சுகந்தி தணிகைவேல், தனசேகர் தேவி துரைராஜ் ஆகிய 5 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பயணிகள் அவதி
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கூட்ரோடு பஸ் நிறுத்தம் திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ளது.

    பஸ் நிறுத்தம்

    தற்போது இந்த கூட்ரோடில் சாலையில் இருபுறமும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டி சிமெண்ட் ஹாலோபிரிக்ஸ் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இங்கிருந்து வாழியூர் ஊராட்சி வழியாக படவேடு செல்லும் ரோடு உள்ளது. மிக முக்கியம் வாய்ந்த பஸ் நிறுத்தம் என்பதால் திருமண மண்டபம், பல்வேறு கடைகள் அமைந்துள்ளது.

    பயணிகள் நிழற்கூடம் இல்லை

    வேலூர் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் வேலூர் செல்லும் நகர பஸ்கள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிறுத்தத்தில் இதுவரை பஸ் பயணிகள் நிழற்கூடம் இல்லை. ஏற்கனவே இருந்த சிறிய நிழற்கூடம் சாலை விரிவாக்க பணிக்கு இடிக்கப்பட்டது.

    இதனால் இங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் அவதிக்குள்ளா கிவருகின்றனர். எனவே இங்கு பெரிய அளவில் பஸ் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், பயணிகள், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வந்தவாசி அருகே பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. பி டெக் படிக்கும் கல்லூரி மாணவன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தற்கொலை

    வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் கல்லூரி விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் இருந்து கிஷோர்காந்த் என்ற மாணவன் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி டெக் படித்து வந்தார்.

    சக மாணவர்களுடன் தங்கியிருந்த கிஷோர் காந்த் இன்று காலையில் உடல்நிலை சரி இல்லாததாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கிஷோர்காந்த் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கிருந்தார். இன்று மதியம் திடீரென விடுதியில் கிஷோர் காந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அறிந்த கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் கைரேகை நிபுணர்கள் , போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர் காந்த் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

    • அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் மிகவும்பழமை வாய்ந்த ெகங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு கூழ்வார்க்கும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடபட்டது.

    மேலும் ெகங்கையம்மன் கோவில் திருவிழாவில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்கும் விழா கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள மந்தைவெளி வீதியில் நடந்தது.

    பக்தர்கள் சுமார் 100அடி உயரத்தில் அந்தரத்தில் பறந்து வந்து கெங்கையம்மனுக்கு மாலை நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

    முன்னதாக ெகங்கையம்மன் கோவிலில் இருந்து நெல் அறுவை எந்திரம் டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்களை தங்களின் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர்.

    பெண்கள் விரதமிருந்து தீசட்டி கையில் ஏந்தியும் வழிபட்டனர். இதில் அக்ராபாளையம் வெட்டியாந்தொழுவம் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    • இஞ்சிமேடு கிராமத்தில் நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள இஞ்சிமேடு, கிராமத்தில் உள்ள ஆனந்தவிநாயகர், கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து.விநாயகர் பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், அங்குூர் பணம், ஆகிய மூன்று கால யாகபூஜைகள், ஆனந்தன், ஐயர் குழுவினரால் பல்வேறு மூலிகைகள் மூலம் செய்தனர்.பின்னர் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர் முன்னதாக மூலவர் ஆனந்த விநாயகருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து. பல்வேறு அபிஷேகங்கள் செய்து. புனித நீரை ஆனந்த விநாயகருக்கு, ஊற்றினார்கள்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இஞ்சிமேடு கிராம பொதுமக்கள், பெரியவர்கள், செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெற்றோர் கண் முன்னே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பங்காரு நகர் வடக்கு பற்றிய சேர்ந்தவர் குணசீலன் (வயது 27) இவர் ஜேசிபி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இவர் தனது மனைவி மோனிகா, அக்கா நீலாவதி அவரது பெண் குழந்தை மயூரி (11/2). ஆகியோருடன் காஞ்சிபுரத்திலிருந்து மாமண்டூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த பைக்கும் குணசீலன் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் குணசீலன், மனைவி மோனிகா, அவரது குழந்தை மயூரி, அக்கா நீலாவதி ஆகியோர் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். குழந்தை மட்டும் நடுரோட்டில் விழுந்தது.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த குணசீலன், அவரது மனைவி மோனிகா, அக்கா லீலாவதி ஆகியோரே சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரின் கண் முன்னே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×