என் மலர்
உள்ளூர் செய்திகள்

அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.
ஆரணி அக்ராபாளையம் கோவிலில் விழா
- அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் மிகவும்பழமை வாய்ந்த ெகங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு கூழ்வார்க்கும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடபட்டது.
மேலும் ெகங்கையம்மன் கோவில் திருவிழாவில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்கும் விழா கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள மந்தைவெளி வீதியில் நடந்தது.
பக்தர்கள் சுமார் 100அடி உயரத்தில் அந்தரத்தில் பறந்து வந்து கெங்கையம்மனுக்கு மாலை நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
முன்னதாக ெகங்கையம்மன் கோவிலில் இருந்து நெல் அறுவை எந்திரம் டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்களை தங்களின் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர்.
பெண்கள் விரதமிருந்து தீசட்டி கையில் ஏந்தியும் வழிபட்டனர். இதில் அக்ராபாளையம் வெட்டியாந்தொழுவம் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.






