என் மலர்
நீங்கள் தேடியது "Widening work is going on on both sides of the road."
- பயணிகள் அவதி
- பொதுமக்கள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கூட்ரோடு பஸ் நிறுத்தம் திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ளது.
பஸ் நிறுத்தம்
தற்போது இந்த கூட்ரோடில் சாலையில் இருபுறமும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டி சிமெண்ட் ஹாலோபிரிக்ஸ் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கிருந்து வாழியூர் ஊராட்சி வழியாக படவேடு செல்லும் ரோடு உள்ளது. மிக முக்கியம் வாய்ந்த பஸ் நிறுத்தம் என்பதால் திருமண மண்டபம், பல்வேறு கடைகள் அமைந்துள்ளது.
பயணிகள் நிழற்கூடம் இல்லை
வேலூர் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் வேலூர் செல்லும் நகர பஸ்கள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிறுத்தத்தில் இதுவரை பஸ் பயணிகள் நிழற்கூடம் இல்லை. ஏற்கனவே இருந்த சிறிய நிழற்கூடம் சாலை விரிவாக்க பணிக்கு இடிக்கப்பட்டது.
இதனால் இங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் அவதிக்குள்ளா கிவருகின்றனர். எனவே இங்கு பெரிய அளவில் பஸ் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், பயணிகள், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






