என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நிலை சரி இல்லாததாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது."

    • வந்தவாசி அருகே பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. பி டெக் படிக்கும் கல்லூரி மாணவன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தற்கொலை

    வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் கல்லூரி விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் இருந்து கிஷோர்காந்த் என்ற மாணவன் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி டெக் படித்து வந்தார்.

    சக மாணவர்களுடன் தங்கியிருந்த கிஷோர் காந்த் இன்று காலையில் உடல்நிலை சரி இல்லாததாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கிஷோர்காந்த் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கிருந்தார். இன்று மதியம் திடீரென விடுதியில் கிஷோர் காந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அறிந்த கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் கைரேகை நிபுணர்கள் , போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர் காந்த் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

    ×