பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை சாவு

பெற்றோர் கண் முன்னே பரிதாபம்போலீசார் விசாரணை
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை சாவு
Published on

வெம்பாக்கம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பங்காரு நகர் வடக்கு பற்றிய சேர்ந்தவர் குணசீலன் (வயது 27) இவர் ஜேசிபி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

நேற்று இவர் தனது மனைவி மோனிகா, அக்கா நீலாவதி அவரது பெண் குழந்தை மயூரி (11/2). ஆகியோருடன் காஞ்சிபுரத்திலிருந்து மாமண்டூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த பைக்கும் குணசீலன் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

இதில் குணசீலன், மனைவி மோனிகா, அவரது குழந்தை மயூரி, அக்கா நீலாவதி ஆகியோர் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். குழந்தை மட்டும் நடுரோட்டில் விழுந்தது.

அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது.

இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த குணசீலன், அவரது மனைவி மோனிகா, அக்கா லீலாவதி ஆகியோரே சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரின் கண் முன்னே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com