என் மலர்
நீங்கள் தேடியது "தூக்கி வீசப்பட்ட தருண் தலையில் பலத்த காயம்"
- விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி, கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மகன் தருண், (வயது 7). தருண் கெங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
தருண் கடந்த 19-ந் தேதி கெங்கை சூடாமணி, கிராமத்தில் உள்ள மருத்துவம்பாடி கூட்ரோடு பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தான்.
அப்போது ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கி அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி தருண், மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தருண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தால் மயங்கி கிடந்தார்.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தருணை, மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தருண், பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாணவனின் பாட்டி பூபதி அம்மாள், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து. விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






