என் மலர்
திருவண்ணாமலை
- வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி நடந்தது
- போலீசார் பேச்சுவார்த்தை
செய்யாறு:
செய்யாறு கொட நகர் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26) .இவரது மனைவி ரூபினி (25). இவர்களுக்கு கிருத்திக் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
அதில் பங்குதாரராக இருந்த ஒருவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார். அவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலுடன் சென்று தனது பங்குத்தொகை ரூ. 60 ஆயிரத்தை கேட்டு கடந்த 27-ந் தேதி திருநாவுக்கரசை மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த கும்பல் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்து கொண்டு நிதி நிறுவனத்தை பூட்டிச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் மறுநாள் 28-ந் தேதி காலையில் பொன்னியம்மன் கோவில் அருகே திருநாவுக்கரசை மீண்டும் அழைத்து பணம் கொடுத்துவிட்டு சாவி வாங்கிக் கொண்டு செல் என்று கூறி அவரை மீண்டும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநாவுக்கரசு 29-ந் தேதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி ரூபினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செய்யாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரூபிணி தனது கணவர் சாவுக்கு 5 பேர் கொண்ட கும்பல் தான் காரணம் அவர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் ஆற்காடு செய்யாறு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரங்கள் எரிந்து நாசம்
- தீயணைப்பு வீரர்கள் வரவில்லை என புகார்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரத்தில் கனக கிரீஸ்வரர் கோவில் மலையில் உள்ளது. இங்குள்ள பெரியநா யகி தாயார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.
இந்த நிலையில் மலை மீது உள்ள கனககிரீஸ்வரர் கோவில் பின்புறத்தில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த தீயில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் வராததால் மரங்கள் எரிந்து நாசமானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- சமாதான கூட்டத்திற்கு அதிகாரி வராததால் ஆத்திரம்
- தாசில்தார் பேச்சுவார்த்தை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகர் பகுதியில் உள்ள மணியம்மை வீதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணியம்மை வீதி அருகே மற்றொரு தரப்பினரின் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. மேலும் மணியம்மை வீதி பொதுமக்கள் இந்த கல்லறை தோட்டம் அருகே உள்ள பாதையை 40 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் கல்லறை தோட்டத்தை பொது வழி பாதையாக பயன்படுத்த கூடாது என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் தற்போது மணியம்மை குடியிருப்பு பகுதியில் மற்றொரு தரப்பு சுவர் அமைத்து பாதையை அடைத்ததாக கூறப்படுகிறது.
அதனால் மணியம்மை பகுதி குடியிருப்பு வாசிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டதால் பள்ளிக்கு கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயி வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து குடியிருப்பு வாசிகள் வருவாய்த் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையொடுத்து மணியம்மை வீதி பொதுமக்கள் வழி பாதை சம்பந்தமாக ஆரணி தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த வட்டாட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் மணியம்மை பகுதி குடியிருப்பு வாசிகள் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரி வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த மணியம்மை குடியிருப்பு வாசி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சுமார் 3 மணி நேரமாக தாசில்தார் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வந்த தாசில்தார் ஜெகதீசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கூட்டம் நடைபெற்றது. மற்றொரு தரப்பினர் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
- திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பன்னிரண்டு புத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 66), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் 4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூபாலனை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட பூபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் பூபாலனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
Tiruvannamalai News Old woman dies after being hit by a train
ரெயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
போளூர்:
போளூர் அருகே உள்ள கிராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). இவர் நேற்று மாம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஆரணி- திருவண்ணாமலை சாலையில் குறுக்கே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் பூங்காவனம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூங்காவனம் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டராம்பட்டு வழியாக கரூர் வரை அமைகிறது
- அதிகாரிகள் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை:
முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டம் மூலம் திருவண்ணாமலை அருகே செட்டிபட்டு ஊராட்சியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
இந்த பணிகளை நேற்று திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர்கள் தியாகு, இன்பநாதன், உதவி பொறியாளர்கள் சசிகுமார், பிரீத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- முகமூடி அணிந்து வந்த 3 பேர் கும்பலுக்கு வலை வீச்சு
- வீட்டின் கதவை தட்டி தம்பதியை தாக்கி துணிகரம்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 67). இவர் வீட்டின் முன்பு பங்கடை மற்றும் மினி மாவு மில் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பிருந்தா (55). இவர்களுக்கு சூர்யா (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் கணவன் -மனைவி வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
வழக்கம் போல் கடையின் ஷட்டரை மூடிவிட்டு நேற்று இரவு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் தூங்கச் சென்றனர்.
நள்ளிரவில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் வெங்கடாஜலபதியின் கடையின் ஷட்டரை திறக்க முயன்றுள்ளனர். பின்னர் வீட்டின் கதவையும் தட்டினர்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த கணவன் மனைவி இருவரும் கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம கும்பல் அவர்களை வீட்டுக்குள் தள்ளி சரமாரியாக தாக்கினர்.
பின்னர் பிருந்தா அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நாணயம், கம்மல், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் 2 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டார். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் 10 1/2 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடாஜலபதி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இன்று காலை டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், திருவத்திபுரம், ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சேரன் (வயது 56). அரசு ஊழியர்.
நேற்று வேலை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை வழியாக கன்னியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சேரன் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற ரோடு ரோலர் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கீழே விழுந்து தலை மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேரனை அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆற்காடு ரத்தனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சேரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சேரன் அக்கா மகன் செந்தில்குமார் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்
- கே.என்.நேரு பதில் அளித்தார்
ஆரணி, மார்ச்:
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வளர்ந்து வரும் ஆரணி நகராட்சியில் மக்கள்தொகைக்கு ஏற்ப நெல், அரிசி வியாபாரிகள் மற்றும் பட்டு சேலை வியாபாரிகள் அதிகளவில் தங்களுடைய வாகனங்களில் செல்வதாலும் இந்த 2 பஸ் நிலையங்களையும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, பதில் அளித்து பேசுகையில், பஸ் நிலையங்கள் அமைப்பது மக்களின் வசதிக்காக அமைக்க ப்படுகிறது, மக்கள் சென்று வர இலகுவாக இருக்கும்.
அதுவும் நகராட்சிக்கு வருவாய் ஏற்படும் வகையில் இருக்க வேண்டும். பஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் இருந்தால் கண்டிப்பாக அமைத்து தரப்படும் என்று பதிளித்தார்.
- டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விளக்கம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
மாநில விரிவாக்க சீரமைப்பு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருகில் உள்ள காட்டாம்பூண்டியில் ஆள் இல்லா விமான மூலம் மருந்து தெளிப்பு (டிரோன் டெக்னாலஜி) என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் மேற்பார்வையில் ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடைபெற்றது.
இதில் வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையத்தை சேர்ந்த சரவணன் கலந்து கொண்டு ஆள் இல்லா விமான தெளிப்பு பற்றிய விளக்கம், அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
அதோடு இப்கோ நிறுவன அலுவலர் அருண்குமார் ஆள்இல்லா விமான தெளிப்பு மருந்து கலக்கும் முறை மற்றும் நீரின் அளவு, வயலில் தெளிக்கும் நேரம், நிலத்தின் அளவு எந்திரத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் அமைப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உழவன் நண்பன் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார்.
- முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன் பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் ஏசி மணி அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்.பியுமான கம்பம் செல்வேந்திரன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம், தயாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன். மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கோவர்த்தனன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், மாவட்ட துணை சேர்மன் ராஜேந்திரன், நகரப் பொருளாளர் அக்பர், நகர மன்ற உறுப்பினர்கள் இஷ்ரத்ஜபின் அப்ஷல், ரிஷ்வானா மாலிக் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஷர்மிளா தரணி, நந்தினி கண்ணன், பழனி ராஜேஸ்வரி முரளி, குப்பு சங்கர், சூரியகலா சுந்தரம் ஆதிதிராவிடர் நலக்குழ துணை அமைப்பாளர் இளையராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் நகர மன்ற உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியின்14-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் கே.பி. மணி. கோடை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் 14-வது வார்டு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம், காமராஜ் நகர், காசி நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் 10 இடங்களில் சிறு மின்விசையுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை வார்டு கவுன்சிலர் கே.பி.மணி தனது சொந்த செலவில் அமைத்திருந்தார்.
இதன் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் கே.பி.மணி தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். திமுக நகர செயலாளர் சி கே அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பொதுமக்களுக்கும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பேரூராட்சி உறுப்பினர்கள் பாக்யராஜ், அம்பிகா ராமதாஸ், கனகா பார்த்திபன், ஜீவா மனோகர், வணிகர் கள், திமுக நிர்வாகிகள் வினோத், சின்னா, எடிஎம் மணி, பார்த்திபன், ராஜேஷ், வழக்கறிஞர் முத்துக்குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 14வது வார்டு பகுதி ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






