என் மலர்
திருவண்ணாமலை
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மனு அளிக்கும் போராட்டம் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட தலைவர் சம்பத்ராவ் தலைமையிலான நிர்வாகிகள் இணைப்பதிவாளர் நடராஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாய கடன்கள், மத்திய கால கடன்கள், நகைக்கடன்கள் வழங்குதல், பொது வினியோக திட்டப்பணிகள், உரம் வினியோகம், சேவை மையங்கள் என பலநோக்கு சேவைகளையே புரிந்து வருகின்றன.
முந்தைய அரசால் விதி 110-ன் கீழ் டிராக்டர், தெளிப்பான்கள், உழவுகருவிகள், மண் பரிசோதனை நிலையங்கள், சிறு போக்குவரத்து வாகனங்கள் என அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு வாங்கப்பட்டன.
இவைகள் பயன்படுத்த இயலாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவைகளால் எவ்வித லாபமும் ஈட்டப்படவில்லை. மாறாக சங்கங்கள் இதன் மூலம் நஷ்டத்தையே சந்திக்கின்றன. தற்போது பல்நோக்கு சேவை மற்றும் வேளாண்மை உட்க ட்டமைப்பு திட்டத்தின்கீழ் போக்குவரத்து வாகனங்கள் பவர்டிரில்லர்கள் என மோட்டார் வாகனங்களும் சங்க விவகார எல்லையில் செய்ய இல்லாத தொழில்களை செய்ய வற்புறுத்தியும் செயலாளர்களிடம் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டு மும்முரமாக எந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் வாங்கப்படும் எந்திரங்கள் செய்ய வற்புறுத்தப்படும் தொழில்கள் சாத்தியமானதா, மக்களுக்கு பயன்பாடு ஏற்படுமா, சங்கங்கள் இதன் வழி லாபம் ஈட்ட முடியமா என்பதை மீண்டும் பரிசீலனை செய்து சாத்தியத்திற்கு உள்ளானவைகளை மட்டும் நடைமுறைப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நஷ்டத்தில் செயல்படும் சங்கங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்.
இவ்வாறு செய்யப்படும் தொழில்களில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படு ம்ப ட்சத்தில் பணியாளர்களையும் நிர்வா கத்தையும் பொறுப்பாக்கபடமாட்டது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
எனவே எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்று பேசினர்
வந்தவாசி:
தமிழக அரசின் மாபெரும் தமிழ்க் கனவு அமைப்பு சார்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா தலைமை வகித்தார். கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம், செயலர் எம்.ரமணன், முதல்வர் எஸ்.ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கம் முதல் தற்காலம் வரை என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கலையும் அரசியலும் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் வந்தவாசி பகுதியில் உள்ள கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் எம்.ஞானமலர் நன்றி தெரிவித்தார்.
- ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திங்கட்கிழமை புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி மயக்க நிலையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தெற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
பின்னர் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வந்தவாசி விஏஓ முகமது யாசிர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஜப்திகாரனை கிராமத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் 108 சங்காபிஷேகம் விழா நடைபெற்றது
வந்தவாசி அடுத்த ஜப்திகாரனை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேகம் மண்டல அபிஷேகம் முடிவடைந்த நிலையில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு 108 சங்குகள் மூலம் ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மங்கள மேல வாத்தியங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க சங்க அபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- ஆரணி அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவிலில் நடந்தது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இங்கு உயர்தேர் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது.
முன்னதாக கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவின் 5ம் நாளான நேற்று நள்ளிரவில் அமிர்தாம்பிகை சந்திர சேகர் உற்வச சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சுமார் 60அடி உயரமும் 30அடி அகலம் கொண்ட பெருந்தேரில் சாமி ஊர்வலம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் செய்தனர்.
- குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு கூட்ரோடு அருகில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குற்ற தடுப்பு நடவடிக்கைளுக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆரணி முள்ளிப்பட்டு ஜங்ஷன் சேவூர் பைபாஸ் சாலை, இரும்பேடு ஜங்ஷன், ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென வாகன சோதையில் ஈடுபட்டனர்.
மேலும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை விசாரித்து முழு சோதனை செய்து விவரங்களை திரட்டி பின்னரே அனுப்பி வைத்தனர்.
சோதனையில் சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
- அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
இதில் திமுகவை சேர்ந்த ஏ.சி மணி என்பவர் நகர மன்ற தலைவராகவும் நகர மன்ற துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த பாரி பாபு என்பவரும் உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.
நேற்று ஆரணி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டம் நகர மன்றத் தலைவர் ஏ.சி மணி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அதிமுக கவுன்சிலர் பேசியாதவது : மக்களின் பிரச்சனையை எடுத்துரைப்பதற்கு மாதம் மாதம் நடைபெற வேண்டிய நகர மன்ற கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவதால் மக்களின் பிரச்சினையை நகர மன்ற கூட்டத்தில் முன்வைக்க முடியவில்லை என்று நகர மன்ற உறுப்பினர் குற்றசாட்டினார்
இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் ராஜ விஜய காமராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
- பங்கு பணத்தை கேட்டு கத்தியால் மிரட்டினர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் கொடநகர் அறிஞர் அண்ணா பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு என்கிற மணி (வயது 26) மாங்கால் கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
அதில் செய்யாறு அருகே உள்ள பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் மகன் அன்பு(24) பங்குதாரராக இருந்தார். அந்த நிறுவனத்தில் இருந்து அன்பு விலகிக் கொண்டதால் அவரது பங்குத் தொகையை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நிதி நிறுவனத்திற்கு சென்ற அன்பு அவரது நண்பர்கள் திருநாவுக்கரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நிதி நிறுவனத்தை பூட்டி சென்று விட்டனர்.
மேலும் திருநாவுக்கரசியிடம் பணத்தை கொடுத்து விட்டு நிதி நிறுவனத்தின் சாவியை வாங்கிக்கொள் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் திருநாவுக்கரசின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் செய்யாறு அண்ணா சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்சியர் தற்கொலைக்கு காரணமான அன்பு ஆதவன்( 21 )நரேஷ் குமார் மற்றும் டில்லி (19) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பஸ் மற்றும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணித்தும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர்.
- மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தை டிரைவர் கண்டக்டர்கள் அனுமதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் பஸ் தினம் கொண்டாடினர். ஆரணி அடுத்த இரும்பேடு கூட்டு சாலையில் தனியார் பஸ் மற்றும் சரக்கு வாகனத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். பஸ் மற்றும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணித்தும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். போலீசார் எச்சரித்து அறிவுறுத்திய பிறகும் பஸ் தினத்தை மாணவர்கள் கொண்டாடினர்.
இதற்கு தனியார் வாகன டிரைவர்களும் துணையாக இருந்தனர்.இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரணி பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் தனியார் பஸ் டிரைவர் தயாளன் (வயது 60). முள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் சரவணன் (39) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் கல்லூரி மாணவர்கள் 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்யார் பகுதியில் நேற்று முன்தினம் பஸ் தினம் கொண்டாடிய மாணவர்கள் மீது செய்யாறு போலீஸ் நிலையத்திலும் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகரில் பஸ் தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் நேற்று முன்தினம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகரில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பஸ் தின கொண்டாட்டம் என்ற பெயரில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர்.
செய்யாறு, ஆரணி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தை டிரைவர் கண்டக்டர்கள் அனுமதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ராமநவமியை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்
செங்கம்:
செங்கம் ஸ்ரீவீரசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒவ்வொரு வருடமும் செங்கம் வீரசுந்தர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்நிலையில் இன்று ராமநவமியை முன்னிட்டு செங்கம் ஸ்ரீவீரசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள மூலவரான ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீராமர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மகாதீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமநாமம் சொல்லி வழிபட்டனர்.
- சொத்து தகராறில் முன்விரோதம்
- ஜெயிலில் அடைப்பு
ஆரணி:
ஆரணி அடுத்த சீனிவாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவ ரது சகோதரர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 24), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலை யில் நிலம் தொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த ஜெயசூர்யா பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்று அங்கு இருந்த காணிக்கல்லை பிடுங்கியுள்ளார்.
தகவல் அறிந்து சக்கரவர்த்தி அங்கு சென்று ஜெயசூர்யாவிடம் ஏன் கல்லை பிடுங்கி போட்டாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, சித்தப்பா சக்கரவர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூர்யாவை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் கேட்டார்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா சீலப்பந்தல் மதுரா மோட்டூர் கிராமம் கொளக்கரைவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 80). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவரது இளைய மகன் அதே பகுதியில் மெத்தை வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வெங்கடாசலம் அவரது மகனுடன் கடந்த 21-ந்தேதி மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தை அணுகும் போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் தேவி, அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு இந்த வேலையை நான் முடித்து தருகிறேன்.
எனக்கு ரூ.16 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னதாக தெரிகிறது. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை முழுவதும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் அவர் சொல்லி அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து தேவி தனது உதவியாளருடன் 24-ந்தேதி மதுரா மோட்டூர் கிராமத்திற்கு சென்று மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட மெத்தை வீட்டை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெங்கடாசலம் 27-ந்தேதி மல்லவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தேவியிடம் கேட்ட போது ரூ.16 ஆயிரம் இல்லாமல் என்னால் மின் இணைப்பு வழங்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சி அடைந்த வெங்டாசலம் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி, மைதிலி மற்றும் போலீசார் மல்லாவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து வணிக ஆய்வாளர் தேவி லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
கடந்த மாதம் இதே மின்சார துறையில் திருவண்ணாமலையில் போர்மேன் ரேணு என்பவர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து மின்வாரிய துறையில் லஞ்சம் வாங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மின்சாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






