என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old woman dead at bus station"

    • ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திங்கட்கிழமை புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி மயக்க நிலையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தெற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    பின்னர் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வந்தவாசி விஏஓ முகமது யாசிர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×