சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில்

திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பன்னிரண்டு புத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 66), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் 4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூபாலனை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட பூபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் பூபாலனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com