என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரூபா தேவி (வயது26). இவர்களது ஒன்றரை வயது மகள் ஏஞ்சல்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கார்த்திக் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புளியம்பேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது.
    • போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடியது. இதில் அந்த நபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர், பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது 22) என்பதும், வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் இவர் தனது நண்பர் ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாம்பு கடித்து இறந்த மாணவியை ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை வாலிபர்கள் சிலர் பகிர்ந்து வந்தனர்.
    • வீடியோ சமூக வலைதளத்திலும் பரவ தொடங்கியது.

    திருவள்ளூர்:

    சோழவரம் அருகே உள்ள புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் அத்தையுடன் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    கடந்த 24-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க மாணவி சென்ற போது பாம்பு கடித்தது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் பாம்பு கடித்து இறந்த மாணவியை ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பகிர்ந்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்திலும் பரவ தொடங்கியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    வீடியோ காட்சியை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 78 வயது முதியவரான பாலு என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மறைந்திருந்து வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார்.

    இந்த பாலியல் கொடுமை சம்பவம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு நடந்துள்ளது. இதனை வெளியே சொல்லக் கூடாது என்று முதியவர் பாலு மிரட்டியதால் மாணவி வெளியே கூறாமல் இருந்து இருக்கிறார்.

    இதற்கிடையே பாம்பு கடித்து மாணவி இறந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வீடியோ பரவியதால் முதியவர் பாலு போலீசில் சிக்கிக் கொண்டார்.

    இதையடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலு, சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான 6 பேரையும் போலீசார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோவில் முதியவரை தள்ளிவிட முயன்றாலும் கூட அவர் மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைக்கிறார்.

    சிறுமியின் மரணத்திற்கு பாம்பு கடித்ததே காரணம். இந்த வீடியோவை பல வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த 5 பேரையும் கைதுசெய்து உள்ளோம். இந்த வீடியோ காட்சியை வைத்து முதியவரை அவர்கள் மிரட்டி பணம் பறித்தனரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    • பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புது குப்பம் கிராமம்.
    • சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுடுகாடு இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புது குப்பம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லை. யாரேனும் இறந்தால் உடலை தனியார் வயல்வெளி வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று கொசஸ்தலை ஆற்றின் கரையில் அடக்கம் செய்து வருகின்றனர். உடல்களை எடுத்து செல்லும்போது வயல் உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைசேர்ந்த தயாளன்( 75) இறந்து போனார். அவரது உடலை தூக்கி சென்றபோத வயல் நிலத்தின் உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிமேல் இறந்தவர்களின் உடல்களை வயல்வெளி வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் கிராமமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    எனவே சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுடுகாடு இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் அதிகளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
    • கூவம் ஆறுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை கொசஸ்தலை ஆற்றுக்கு அதிகாரிகள் கொடுப்பதில்லை” என்றனர்.

    திருவொற்றியூர்:

    கொசஸ்தலை ஆறு வெள்ளி வாயல் சாவடி, எடப்பாளையம், மணலிபுதுநகர், கடையங்குப்பம் வழியாக பாய்ந்து அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகதுவார பகுதியில் கடலில் கலக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் அதிகளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.

    அருகில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து குளிரூட்டும் நீரை ஆற்றில் விடுவதாலும், தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீராலும் மீன்கள் இறப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து காட்டுக் குப்பம் எண்ணூரைச் சேர்ந்த மீனவர்கள் கூறும் போது, "கடந்த சில நாட்களாக கொசதஸ்தலை ஆற்று பகுதியில் மீன்கள் இறப்பது அதிகரித்து உள்ளது. இது எங்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்து உள்ளது. இது பல வருடங்களாக விட்டு, விட்டு நடைபெறுகிறது. அதிகளவு மீன்கள் இறப்பது இதுவே முதல் முறை" என்றனர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது, "ஏற்கனவே ரசாயன வாயு கசிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொழிற்சாலை, அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரை கண்காணிக்க வேண்டும். அடையாறு, கூவம் ஆறுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை கொசஸ்தலை ஆற்றுக்கு அதிகாரிகள் கொடுப்பதில்லை" என்றனர்.

    • சூரியபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

    திருத்தணி:

    திருத்தணி, ஏரிக்கரை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டது, அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருடை மகன் சூரியபிரகாஷ் (வயது 17) என்பது தெரிந்தது.

    அவர், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

    பள்ளி முடிந்ததும் அவர் உடன் படிக்கும் திருத்தணி பகுதியை சேர்ந்த சக மாணவர்களுடன் ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. அப்போது சூரியபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

    மாணவன் சூரிய பிரகாசின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • மாணவி சரளா படித்த பள்ளியில் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியில் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த சரளா (வயது 17) என்பவர் பள்ளியின் விடுதியில் தங்கி 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை விடுதியில் உள்ள முதல் மாடி அறையில் மாணவி சரளா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாணவி தற்கொலை பற்றி அறிந்ததும் பள்ளி விடுதி முன்பு அவரது உறவினர்கள் மற்றும் விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதேபோல் மாணவியின் சொந்த ஊரான தெக்களூரிலும் கிராம மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மப்பேடு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு உடனடியாக மாற்றப்பட்டது. போலீசார் 3 பிரிவாக பிரிந்து மாணவியுடன் தங்கி இருந்தவர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

    ஆஸ்பத்திரி டீன் அரசிவர்ஷன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நாராயண பாபு, பிரபு, வைரமாலா ஆகியோர் மாணவியின் அண்ணன் சரவணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தினர். இது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாணவி உடல் பரிசோதனை நடந்ததையொட்டி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வடக்கு மண்டல ஐ.ஜி.தேன்மொழி, ஆயுதப்படை ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் சரக டி.ஏ.ஜி சத்திய பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், தலைமையில் கண்ணீர் புகைகுண்டு வீசும் வாகனத்துடன் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் பதட்டமான நிலை நிலவியது. ஆஸ்பத்திரிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தனர்.

    இதற்கிடையே காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. 2½ மணிநேரம் மாணவி சரளாவின் உடலை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து உள்ளனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ளும்படி ஆஸ்பத்திரியில் இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மாணவியின் சாவில் உள்ள மர்மம் மற்றும் இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் மதியம் 12.30 மணி வரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது அண்ணன் சரவணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மதியம் 12.40 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊரான தெக்களூருக்கு ஆம்புலன்சு வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாணவியின் உடல் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தெக்களூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் மாணவி சரளா படித்த பள்ளியிலும் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுதியில் தங்கி படித்த 80 மாணவிகள் அவர்களது பெற்றோரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறும்போது, நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் வழக்கின் தன்மையை பொறுத்து பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். மாணவியின் கிராமமான தெக்களூரிலும் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளி நபர்கள் கிராமத்துக்குள் வருவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் போலீஸ்காரர் திருநாவுக்கரசு கோவில் பதாகையில் வசித்து வந்தார்.
    • திருநாவுக்கரசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆவடி:

    கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் திருநாவுக்கரசு. 39 வயதான இவர் ஆவடி அருகே உள்ள கோவில் பதாகை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    இவரது மனைவி கலைச்செல்வி. 10 வயதில் ரசிகா என்ற மகளும், 6 வயதில் ரக்‌ஷன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் போலீஸ்காரர் திருநாவுக்கரசு கோவில் பதாகையில் வசித்து வந்தார். திருநாவுக்கரசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசின் மனைவி கலைச்செல்வி புரசைவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த திருநாவுக்கரசு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது நண்பர் சுரேந்தர் ஆவடி டேஸ்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று திருநாவுக்கரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜலட்சுமி.
    • கொரட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (வயது74). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகள் பெங்களூருவில் இருப்பதால் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    நேற்று மாலை இவருடைய வீட்டுக்கு 2 டிப்-டாப் வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களை மாநகராட்சி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர்.

    திடீரென அவர்கள் மூதாட்டி ராஜலட்சுமியை தாக்கி கீழே தள்ளிவிட்டு கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த முகமூடியை ராஜலட்சுமியின் தலையில் மாட்டிவிட்டனர். சத்தம் போடாமல் இருக்கஅவரது வாயில் துணியை வைத்து அடைத்தனர். இதனால் மூதாட்டி ராஜலட்சுமி நிலைகுலைந்தார்.

    உடனே மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்தனர். பின்னர் வீட்டில் வேறு ஏதேனும் சிக்குமா? என்று தேடிப்பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்காததால் நகையுடன் மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் எழுந்த ராஜலட்சுமி இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கொரட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ராஜலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கை வரிசை காட்டி உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் வாடகை கார்களை இயக்க ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.
    • இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இதில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று வர 2 வாடகை கார்களை பயன்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் வாடகை கார்களை இயக்க ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நாயினார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ஜீவா, இளங்கோ, ராமமூர்த்தி, மதன், ஆல்பர்ட், தென்னரசு உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் வட்டார மருத்துவ அலுவலர் பால மணிகண்டன், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுகாதார பணிகளில் துணை இயக்குனரை சந்தித்து இதுகுறித்து முறையிடுமாறு ஆலோசனை வழங்கினர். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • காஞ்சிபுரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது.
    • வேன்-பஸ் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அப்பகுதியில் உள்ள சிப்காட்டிற்கு செல்ல சரக்குவேன் ஒன்று சாலையை கடக்க முயன்றது.அந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் வேகமாக சரக்கு வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வேனை சிறிது தூரம் இழுத்து சென்று சாலை நடுவே இருந்த உயிர் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.

    இதில் உயர் கோபுர மின் கம்பம் சாலையில் இருந்த பெரிய போர்டு மீது சரிந்தது. பஸ்சில் சிக்கிய சரக்குவேன் முழுவதும் நசுங்கியது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சரக்குவேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விபத்து காரணமான அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெங்களூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வேன்-பஸ் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் ராஜ்குமார் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி திவ்யா (21). இருவருக்கும் வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் ராஜ்குமார் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×