என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இறந்தவர் உடலை எடுத்து சென்ற காட்சி
பொன்னேரி அருகே இறந்தவர் உடலை வயல் வெளியாக ஒரு கிலோ மீட்டர் தூக்கி செல்லும் கிராம மக்கள்
- பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புது குப்பம் கிராமம்.
- சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுடுகாடு இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புது குப்பம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லை. யாரேனும் இறந்தால் உடலை தனியார் வயல்வெளி வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று கொசஸ்தலை ஆற்றின் கரையில் அடக்கம் செய்து வருகின்றனர். உடல்களை எடுத்து செல்லும்போது வயல் உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைசேர்ந்த தயாளன்( 75) இறந்து போனார். அவரது உடலை தூக்கி சென்றபோத வயல் நிலத்தின் உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிமேல் இறந்தவர்களின் உடல்களை வயல்வெளி வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் கிராமமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
எனவே சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுடுகாடு இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






