என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஏரி, குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
    • பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    பொன்னேரி:

    வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஏரி, குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை மற்றும் தயார் நிலை குறித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் கூறியதாவது:-

    பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த பருவமழையின் போது ஆரணி ஆற்றில் 8 இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டது. தற்போது வருகின்ற பருவமழைக்கு முன்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான உபகரணங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • கொள்ளை குறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல், அம்மன் அவென்யூ, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனிடாஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் செங்குன்றத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல், அம்மன் அவென்யூ, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனிடாஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் செங்குன்றத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்து வீசினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் பொன்னேரி- மீஞ்சூர் நெடுஞ்சாலை பொன் நகர் அருகே மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மர்ம நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்து வீசினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தில் உள்ள கூவம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடிக்கு திருவள்ளூர் தாலுகா போலீசுக்கு தகவல் அளித்தார். சப் -இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர்யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • எரிவாயு சுடுகாடு கட்டிட, பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு செய்தார்.
    • கட்டிடத்தின் தரம் குறித்து கேட்டறிந்து சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை பணிகள், மற்றும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எரிவாயு சுடுகாடு கட்டிட, பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டிடத்தின் தரம் குறித்து கேட்டறிந்து சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதில் உதவி இயக்குனர் கண்ணன், உதவி பொறியாளர் முத்து, செயல் அலுவலர் வெற்றி அரசு பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் வார்டு உறுப்பினர்கள் சுகன்யா, அபூபக்கர், ரஜினி, நக்கீரன், ஜெயலட்சுமிதன்ராஜ், மற்றும் அதிகாரிகள் பலர் உடன் கலந்து கொண்டனர்.

    • குமாரச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார்.
    • பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள குமாரச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (22). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிதடி வழக்கில்மப்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஏற்கனவே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது.

    இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாணின் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட வசந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ராகுல் (24) என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

    • பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
    • பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும், செயல் அலுவலராக கலாதரனும் உள்ளனர்.

    பேரூராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர்மேடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்பட வில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இந்தநிலையில் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஆரணி பேரூராட்சி அலுவலம் முன்பு குடிநீர் வழங்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் கூறும்போது, வள்ளுவர் மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்க வில்லை, தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை என்றார்.

    அப்போது பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரூராட்சி தலைவர் , செயல் அலுவலர், நியமனக்குழு உறுப்பினரும், 10-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கண்ணதாசன் ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார் போராட்த்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    வள்ளுவர் மேடு பகுதிக்கு பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை.

    இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று திமுகவினர் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,திருத்தணி எம்,எல்,ஏ.வுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, திருத்தணி பூபதி,திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    மேலும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் டி.கே.பாபு, திருவள்ளூர் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால்,மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன்,டாக்டர் குமரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனர்.

    • பக்கத்து கடைக்காரர் நகை கடையின் சட்டர் உடைக்கப்பட்டது பார்த்து உரிமையாளருக்கு தகவல் அளித்தார்,
    • நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் விமல் (40) இவர் மீஞ்சூர் பஜார் வீதியில் பிரகாஷ் ஜுவல்லரி நடத்தி வருகிறார். நேற்றிரவு மர்ம நபர்கள் நான்கு பேர் கடையின் சட்டர் உடைத்து 15 சவரன் அடகு நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    வழக்கமாக வியாழக்கிழமை இரவு இந்த கடை மூடப்பட்டது வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் யாரும் கடைக்கு வரவில்லை. இதற்கிடையே இன்று பக்கத்து கடைக்காரர் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டது பார்த்து உரிமையாளருக்கு தகவல் அளித்தார் அதன் அடிப்படையில் வந்த உரிமையாளர் கடை உடைக்கப்பட்டு உள்ளே நகைகள் திருடப்பட்டது என்பது தெரிய வந்ததை அடுத்து உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறை வந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கடையின் உள்ளே அமைந்துள்ள சிசிடிவி பார்த்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி யில் நான்கு பேர் கடையில் சட்டரை உடைப்பது போல் உள்ளது இதில் இரண்டு பேர் கடையில் உள்ளே சென்று பொருள்களை திருடுகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல்துறை விசாரணையில் நடத்தி வருகிறது.

    • தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.
    • உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்

    தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பூந்தமல்லியில் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்பில் பூந்தமல்லியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இனிப்பு கடைகள், பேக்கரிகள், இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பண்டிகை காலத்தில் தரமான இனிப்பு, காரம், தின்பண்டங்கள் தயாரிப்பது குறித்தும், செயற்கை நிரமூட்டிகளை தவிர்ப்பது, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுதல், தண்ணீர் பரிசோதனை, சுகாதாரம், பணியாளர்களின் நலன், மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    அதற்கான வழிமுறைகள், உணவு பாதுகாப்புத்துறை அனுமதி சான்று, பொதுமக்களை பாதிக்காத வகையில் உரிய விதிமுறைகளை பின்பற்றி உணவு மற்றும் தின்பண்டங்களை தயாரிப்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வேலவன், ரவிச்சந்திரன், இனிப்பு காரம் தயாரிப்பவர்கள், வியாபாரிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்து 1000 த்திறகும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
    • பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இராமநாதன் காட்டூர் தத்தை மஞ்சி ஏரியில் ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    கடந்த பருவ மழையின் போது ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்து 1000 த்திறகும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. பாதிக்கப்பட்ட கிராம மக்கள் திருமண மண்டபங்கள், பேரிடர் மேலாண்மை மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி ஆற்றின் கரைகளில் பாதிக்கப்பட்ட காட்டூர் தத்தமஞ்சி ஏரி, ஏ ரெட்டிபாளையம், பெரும்பேடுக்குப்பம், ஆண்டார் மடம், பிரளயம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுப்படி பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இராமநாதன் காட்டூர் தத்தை மஞ்சி ஏரியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதி விவசாயிகள் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற மதகுகள் உயரம் 4 அடி உள்ளதால் கிராமங்கள் நீரில் மூழ்கும் எனவும் உபரி நீர் வெளியேறும் மதகுகள் அளவை குறைக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக மாற்று இடத்தில் உபரி நீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார். அப்போது தாசில்தார் செல்வகுமார் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றி வேலன் வருவாய்த்துறையினர் கிராம மக்கள் உடன் இருந்தனர்

    • பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
    • பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சி நூற்றாண்டை கண்ட பேரூராட்சியாக இம்மாவட்டத்தில் உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சிமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும் பதவி வகித்து வருகின்றனர். பேரூராட்சி மன்ற செயல் அலுவலராக கலாதரன் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், ஆரணி பேரூராட்சியில் உள்ள வள்ளுவர்மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை, தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை, ஒர்க் ஆர்டர் இப்பகுதியைச் சேர்ந்த 13-வது வார்டு திமுக கவுன்சிலரான தனக்கு காண்பிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், பேரூராட்சி மன்ற தலைவர், செயல் அலுவலர், நியமனக்குழு உறுப்பினரும், 10-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கண்ணதாசன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதியுடன் கூறினர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், வள்ளுவர் மேடு பகுதிக்கு பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதன் பின்னர்,அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    ×