search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டம்
    X

    திமுகவினர் ஆர்ப்பாட்டம் 

    திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டம்

    • இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை.

    இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று திமுகவினர் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,திருத்தணி எம்,எல்,ஏ.வுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, திருத்தணி பூபதி,திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    மேலும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் டி.கே.பாபு, திருவள்ளூர் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால்,மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன்,டாக்டர் குமரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனர்.

    Next Story
    ×