என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ஆரணி ஆற்றின் கரையோர பகுதியில் சார் ஆட்சியர் ஆய்வு
    X

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ஆரணி ஆற்றின் கரையோர பகுதியில் சார் ஆட்சியர் ஆய்வு

    • ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்து 1000 த்திறகும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
    • பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இராமநாதன் காட்டூர் தத்தை மஞ்சி ஏரியில் ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    கடந்த பருவ மழையின் போது ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்து 1000 த்திறகும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. பாதிக்கப்பட்ட கிராம மக்கள் திருமண மண்டபங்கள், பேரிடர் மேலாண்மை மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி ஆற்றின் கரைகளில் பாதிக்கப்பட்ட காட்டூர் தத்தமஞ்சி ஏரி, ஏ ரெட்டிபாளையம், பெரும்பேடுக்குப்பம், ஆண்டார் மடம், பிரளயம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுப்படி பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இராமநாதன் காட்டூர் தத்தை மஞ்சி ஏரியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதி விவசாயிகள் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற மதகுகள் உயரம் 4 அடி உள்ளதால் கிராமங்கள் நீரில் மூழ்கும் எனவும் உபரி நீர் வெளியேறும் மதகுகள் அளவை குறைக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக மாற்று இடத்தில் உபரி நீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார். அப்போது தாசில்தார் செல்வகுமார் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றி வேலன் வருவாய்த்துறையினர் கிராம மக்கள் உடன் இருந்தனர்

    Next Story
    ×