என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு- கொலை செய்யப்பட்டாரா?
- மர்ம நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்து வீசினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் பொன்னேரி- மீஞ்சூர் நெடுஞ்சாலை பொன் நகர் அருகே மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மர்ம நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்து வீசினரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தில் உள்ள கூவம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடிக்கு திருவள்ளூர் தாலுகா போலீசுக்கு தகவல் அளித்தார். சப் -இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர்யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.






