என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • 25ஏக்கர் பரப்பில் அமைய உள்ள கல்வி நிறுவனத்தில் சிபிஎஸ்சி, ஐபி மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் வழங்க உள்ளது.
    • எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி அருகே ஏடூரில் உள்ள டாக்டர் செரியன் மெடிவில்லா வளாகத்தில் டாக்டர் கே.எம்.செரியன் எஜுகேஷனல் சொசைட்டி மற்றும் டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் சார்பில் அமைக்கப்பட உள்ள தி ஸ்டடி குளோபல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதன் நிறுவன தலைவர் டாக்டர் கே.எம்.செரியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றுகளை நட்டார்.

    தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏடூரில் உள்ள பிராண்டியர் மெடிவில்லே எனப்படும் மருத்துவ கிராம் நாட்டின் முதல் உயிரியல் பூங்காவாக உள்ளது. இப்படிப்பட்ட ஆராய்ச்சி அமைப்போடு ஒரு கல்வி நிறுவனம் செயல்படும் போது, மற்ற கல்வி நிறுவனங்களில் பெற முடியாத ஆராய்ச்சி அறிவுடன் கூடிய தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெற முடியும். மேலும் நமது பாரத பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையான ஆத்ம நிர்பர் பாரதத்தை உருவாக்க இந்த கல்வி நிறுவனம் மாணவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், வல்லுனர்களாகவும் உருவாக்கும். இந்த கல்வி நிறுவனம் நாட்டின் அடையாளமாக மாறும் என்றார்.

    25ஏக்கர் பரப்பில் அமைய உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் சிபிஎஸ்சி, ஐபி மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் வழங்க உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இங்கு செயற்கை நுண்ணறிவு, டிஷ்யூ என்ஜினியரிங், ரோபோடிக்ஸ், டிரோன் தொழில்நுட்பம், ஸ்டெம் செல்கள் குறித்தும் கற்றுத்தரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்வில் மொரீசியஸ் நாட்டின் கல்வி மற்றும் கலை கலாச்சார துறை அமைச்சரும், யுனெஸ்கோவில் ஆலோசகராகவும் உள்ள ஆறுமுகம் பரசுராமன், நிறுவன துணை தலைவர்கள் டாக்டர் சந்தியா செரியன், சஞ்சய் செரியன் ஆகியோருடன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி தலைவர்கள் எளாவூர் வள்ளி முருகேசன், ஏடூர் ரேவதி பங்கேற்றனர்.

    • தனிப்படை போலீசார் கூடுவாஞ்சேரியில் பதுங்கி இருந்த வினோத்குமாரை நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • வினோத்குமார் பிரபல ரவுடி சிடி மணியின் வலது கையாக செயல்பட்டு வந்த கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சென்னை எம்.ஜி.ஆர் நகர் புலிதேவன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கானத்தூர் போலீசாரால் வினோத்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில் ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கூடுவாஞ்சேரியில் பதுங்கி இருந்த வினோத்குமாரை நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வினோத்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வினோத்குமார் பிரபல ரவுடி சிடி மணியின் வலது கையாக செயல்பட்டு வந்த கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பஸ்சின் உள்ளே பின் புறம் புகை வந்த டியூப் லைட் ஒயர் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
    • பஸ்சை இயக்கிய போது புகை வரவில்லை. இதனையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு பஸ் அரக்கோணம் நோக்கி புறப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரக்கோணத்திற்கு புறப்பட்ட ஒரு அரசு பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகள், உள்பட ஏராளமானோர் பயணித்தனர். பஸ் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் அருகே செல்லும் போது பஸ்சில் இருந்த டியூப் லைட் ஒயரில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்து பஸ்சை நிறுத்தினர். இதனையடுத்து தாலுகா போலீசில் கொடுத்த தகவலின் பேரில் பஸ்சின் உள்ளே பின் புறம் புகை வந்த டியூப் லைட் ஒயர் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.

    அதன் பிறகு பஸ்சை இயக்கிய போது புகை வரவில்லை. இதனையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு பஸ் அரக்கோணம் நோக்கி புறப்பட்டது.

    • மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.
    • நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் முன்னிலை வகித்தார். இதில் மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.

    இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.

    • கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

    ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து, பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்தனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்திருப்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • பூட்டியிருக்கும் வீட்டிற்கும் ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பொன் நகர், கோளப்பன்சேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவது வழக்கம். இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்துவதற்காக பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்தபோது ஒவ்வொருவருக்கும் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகரித்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை மின் கட்டணமாக வந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் தங்களுக்கு எப்பொழுதும் மின்சார கட்டணம் ரூ.300 முதல் ரூ.500 வரை மட்டுமே வரும் என்றும் தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்திருப்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் கணக்கீடு செய்ய ஒப்பந்த ஊழியர்களை வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் மின் கணக்கீடு எடுக்கப்பட்டதாகவும் அதில் சில குளறுபடிகள் நடந்ததால் தற்போது இது போன்று அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக தெரிவித்தனர். தற்போது இதனை கண்டறிந்து ஒப்பந்த ஊழியர்களை நீக்கி விட்டு அரசு ஊழியர்களை மின் அளவீடு எடுப்பதற்கு பணியில் அமர்த்தி உள்ளதால் இந்த குறைபாடுகள் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த குறைபாடு முலுவதுமாக சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

    குறிப்பாக பூட்டியிருக்கும் வீட்டிற்கும் ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வினோத்தை கைது செய்ய பட்டாபிராம் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்
    • அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து பெயர் சேர்க்க ஆலோசனை

    பொன்னேரி:

    திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தலைவர் சிவராமன், நகர இளைஞரணி செயலாளர் மில்லர், முன்னாள் பேரூர் கழக செயலாளர் லெனின், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆர்பார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார் வே.ஆனந்தகுமார் சிறப்புரையாற்றினர். இதில் பேரூராட்சி 18 வார்டுகளிலும் உள்ள கழக செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவது, மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கௌரவித்தல், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் நகராட்சியில் அடங்கிய அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான பிஎல்ஏ முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் பேரூர் நிர்வாகிகள், முன்னாள் துணை செயலாளர் ஜோசப், துணைச் செயலாளர் கணேஷ், ஒன்றிய பிரதிநிதி திருப்பதி உட்பட இளைஞர்அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • மழை நீர்வரத்து கால்வாய் பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது.
    • குதிரை கடந்த இரண்டு நாட்களாக பள்ளத்தில் விழுந்து சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சின்ன ஈக்காடு பகுதியில் மழை நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது. குதிரையால் மேலே வர முடியவில்லை. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விநாயகமூர்த்தி, சிவக்குமார், அன்பரசு, சிலம்பரசன் அங்கு விரைந்து வந்து கயிறு கட்டி குதிரையை பத்திரமாக மீட்டனர். இந்த குதிரை கடந்த இரண்டு நாட்களாக பள்ளத்தில் விழுந்து சிக்கி இருப்பது தெரிய வந்தது. குதிரை யாருக்கு சொந்தமானது என்று தீயணைப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார்.
    • போலீசார் சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, கோடம்பாக்கம் அசோகா அவின்யூ பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் பாபு. தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது மனைவி எலிசபெத். இவர் சென்னை மாநகராட்சியின் 112-வது வார்டு கவுன்சிலர் ஆவார். அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார். அப்போது ரூ.6 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் வைர நகை திடீரென மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அகஸ்டின் பாபு வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    • பள்ளி தாளாளர் வினோத் கதறி அழுதபடி கொசு மருந்தை வாய்க்குள் அடித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    பள்ளியின் தாளாளராக வினோத் (வயது 34) உள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் மற்றும் சிறப்பு வகுப்பு தொடர்பாக பேசுவதாக அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி தாளாளர் வினோத்தின் பாலியல் தொல்லை எல்லை மீறி சென்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி முன்பு மறியலிலும் ஈடுபட முயன்றனர்.

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 3 மணிக்கு பின்னர் மாணவிகளும், அவர்களது பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தற்போது வினோத் தலைமறைவாக உள்ளார்.

    இதையடுத்து வினோத்தை கைது செய்ய பட்டாபிராம் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே பாலியல் குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் தெரிய வரும்.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள பள்ளி தாளாளர் வினோத் கதறி அழுதபடி கொசு மருந்தை வாய்க்குள் அடித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் வினோத் மனமுடைந்து பேசுகிறார்.

    மாணவ-மாணவிகள் நன்றாக வரவேண்டும் (பெயர்களை குறிப்பிட்டு பேசுகிறார்). மற்றவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்று கவலைப்பட வேண்டாம். யாரையும் நான் தவறாக நினைத்ததில்லை. அனைவர் மீதும் அன்பு உண்டு. ஆனால் என் மீது இப்படி சொல்வீர்கள் என்று நினைக்கவில்லை. நான் அழ மாட்டேன் என்று நினைக்காதீர்கள். உடைந்து விட்டேன். நான் இன்னும் சாகவில்லை. (கதறி அழுகிறார்). அப்பா நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் தவறு செய்யவில்லை.

    ஆசிரியர்கள், கணித ஆசிரியர் (பெயர்கள் குறிப்பிட்டு) நீங்கள் கிடைத்தது வரம். எல்லோரும் முக்கிய மாணவர்கள். எதுவும் ஆகாது. எனது மாணவர்களை நான் நம்புகிறேன். அதற்கு பிறகு என்னேவோ...

    உங்களுக்காகதான் நான் உள்ளேயே வந்தேன். நீங்கள் அனைவரும் நல்ல மாணவர்கள். யாரோ ஒருவர் கைப்பாவைக்காக உங்களது வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள். வாழ்க்கை போனால் வராது தம்பி. இதை புரிந்து கொள்ளுங்கள். கூட இருப்பவர்கள் பேசுவார்கள். ஆசிரியர்கள் தூண்டி விடுவார்கள். இது நமக்கு வேண்டாம். தாய், தந்தை தான் முக்கியம். அவர்கள் தான் கடைசி வரை வருவார்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள்.

    வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. (அப்போது கொசு மருந்து ஸ்பிரேவை வாய்க்குள் அடிக்கிறார்) நான் போகிறேன். கண்டிப்பாக பிழைக்க மாட்டேன். அனுதாபம் எல்லாம் கிடையாது. நான் நிறைய பேச வேண்டும் என்று நினைப்பவன். அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் வாழும் பூமியில் சக மனிதனை மனிதாக நேசிக்க வேண்டும். அவர்களுக்கு காசு, கார் வாங்கி கொடுக்க போகிறோமோ? நேசித்து தான் போவோமே... அவர்கள் சொல்வது எல்லாம் நம்பும்படி இல்லை. நான் தவறு செய்யவில்லை. எனக்கும் தெரியும். என்னுடைய குழந்தைக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் பேசுகிறார்.

    இந்த வீடியோ பதிவை வினோத் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை வைத்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வினோத் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணிடம் போலீசார் தனியாக விசாரித்து வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
    • சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகளில் நீர் இருப்பு தொடர்த்து உயர்ந்து வருகிறது.

    பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி 2,023 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 450 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் சென்னைக்கு 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 227 கன அடி‌ நீர் வந்து கொண்டிருக்கிறது. 192 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி ஆகும். 457 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 257 கன‌ அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இதில் இன்றைய நிலவரப்படி 2484 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 139 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் 139 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடி நிரம்பி வழிகிறது.

    ×