என் மலர்
திருப்பூர்
- இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- அவிநாசி வட்டாரத்தில் மானாவாரி முறையில் 3 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை அறுவடையை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். அறுவடை செய்யப்படும் நிலக்கடலையை காய வைப்பதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் 1 லட்சம் சதுர அடியல் உலா்கள வசதியுள்ளது.
மேலும், இ-நாம் திட்டத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்று தங்களது விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம். விவசாயிகள் எதிா்பாா்த்த விலை கிடைக்காவிட்டால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்துகொள்ளலாம்.
இவ்வாறு, இருப்பு வைக்கப்படும் நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டி விகிதத்திலும் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
- மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் , செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நான்கு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.
ஊத்துக்குளி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் விஜயமங்கலத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இளையோர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.
மேலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதே போல் இதே பிரிவில் மாணவி ஆர். பிரியதர்ஷினி வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்களை பள்ளியின் தாளாளர் கே.சந்திரகலா, தலைவர் பி.கருப்பண்ணன், செயலாளர் கே.வினோதினி,முதல்வர் டாக்டர் கே.ஹரிதேவன், உடற்கல்வி ஆசிரியர் பி.கதிரவன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள்,மாணவ-மாணவிகள் வெகுவாக பாராட்டினர்.
- அதிக அளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்
- தோல் பகுதியில் வெம்பியும் பெரும்பாலான பழங்கள் அழுகி பெருமளவு சேதமடைந்து வருகின்றன
உடுமலை :
உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. நடப்பாண்டு கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் 2 மாதத்திற்கு முன் தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்றதால் அதிக அளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்.60 நாட்களுக்குள் அறுவடை துவங்கிய நிலையில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக காய் பிடிப்பது குறைந்து, தக்காளி பழங்கள் மிகவும் சிறியதாகவும், தோல் பகுதியில் வெம்பியும் பெரும்பாலான பழங்கள் அழுகி பெருமளவு சேதமடைந்து வருகின்றன.இந்நிலையில் விவசாயிகள் சாகுபடி செய்த போது 14 கிலோ பெட்டி 2,400 ரூபாய் வரை விற்ற நிலையில் வரத்து அதிகரிப்பால் கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.
தற்போது உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி குறைந்த பட்ச விலையாக ரூ.50க்கும், அதிகபட்சமாக ரூ.230க்கும் மட்டுமே ஏலம் போனது. வெயிலின் தாக்கம் மற்றும் விலை சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைந்த தக்காளி பழங்களை ரோட்டில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விலை அதிகரித்ததால் கூடுதல் வருவாய் எதிர்பார்த்து, தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பருவ மழை காலத்தில் மழை பொய்த்து கோடை வெயிலை விட அபரிமிதமான வெயில் அடிப்பதால் தக்காளி செடிகள் கருகியும், பழங்கள் அழுகியும், நோய் தாக்கியும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்து தரமான தக்காளி மட்டுமே விற்பனையாகிறது.இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொலையாளியான சோனை முத்தையா தேனியை சேர்ந்தவர் என்பதால் அங்கு போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45), மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் , வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் கடந்த 3-ந்தேதி இரவு நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (27), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார், மோகன்ராஜை வெட்டிக்கொன்றனர். அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி (68), செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெங்கடேசனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் என்பதால் அங்கு சென்று பதுங்கியிருக்கலாம் என எண்ணிய தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மற்றொரு கொலையாளியான சோனை முத்தையா தேனியை சேர்ந்தவர் என்பதால் அங்கு போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.
இந்தநிலையில் வெங்கடேசன், சோனை முத்தையா ஆகியோர் இன்று காலை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தவும் உள்ளனர்.
4 பேர் கொலை காரணமாக பல்லடத்தில் கடந்த 4 நாட்களாக பதற்றம்-பரபரப்பு நிலவி வந்தது. பா.ஜ.க.வினர், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் உயிரிழந்த 4 பேர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரின் உடல்களும் கள்ளக்கிணறு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பரபரப்பாக இருந்த பல்லடத்தில் அமைதி திரும்பியுள்ளது.
இதனிடையே கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
- கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
- குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் அமராவதி வாய்க்காலில் பாலத்துக்கு அடியில் தலையில் காயத்துடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டனர். அந்த உடலின் மேல் இலை தழைகள் உள்ளிட்ட குப்பைகள் மூடியிருந்தது. மேலும் கழுத்து மற்றும் கைகளில் ருத்ராட்ச மாலை அணிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அந்த உடல் காணப்பட்டது.
உடனடியாக இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த மதியழகன்(வயது 45) என்பது தெரியவந்தது. இரும்பு வியாபாரியான அவர் தனது நண்பர்களும் இரும்பு வியாபாரிகளுமான தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி (45), முருகன் (40)ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்திற்கு இரும்புகள் வாங்க சென்றனர்.
அப்போது கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2பேரும் சேர்ந்து மதியழகன் தலையில் கல்லைப்போட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து தலைமறைவான பாண்டி, முருகன் ஆகிய 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 4 பேரின் உடல்களும் கள்ளக்கிணறு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- கடந்த 4 நாட்களாக பரபரப்பாக இருந்த பல்லடத்தில் அமைதி திரும்பியுள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருேக உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45), மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் கடந்த 3-ந்தேதி இரவு நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்(27) திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24) ,தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார், மோகன்ராஜை வெட்டிக்கொன்றனர். அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி(68), செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெங்கடேசனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் என்பதால் அங்கு சென்று பதுங்கியிருக்கலாம் என எண்ணிய தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு கொலையாளியான சோனை முத்தையா தேனியை சேர்ந்தவர் என்பதால் அங்கு போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
4பேர் கொலை காரணமாக பல்லடத்தில் கடந்த 4 நாட்களாக பதற்றம்-பரபரப்பு நிலவி வந்தது. பா.ஜ.க.வினர், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் உயிரிழந்த 4பேர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 4பேரின் உடல்களும் கள்ளக்கிணறு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பரபரப்பாக இருந்த பல்லடத்தில் அமைதி திரும்பியுள்ளது.
இதனிடையே கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
- போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்துவை திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் கைது செய்தனர்.
- பொதுமக்கள், பா.ஜ.க.வினர் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருேக உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக இருந்தார்.
இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்(27) திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24) ,தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார், மோகன்ராஜை வெட்டிக்கொன்றனர். அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, உறவினர் ரத்தினம்மாள் ஆகியோரையும் வெட்டிக்கொன்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள், பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பல்லடத்தில் 4 மாவட்டத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்துவை திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது வாகன சோதனையில் போலீசார் அவனை மடக்கினர்.
மேலும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். வெங்கடேசன் மீது முக்கூடல், சுத்தமல்லி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. தேனியை சேர்ந்த சோனை முத்தையாவையும் தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து கொலையான 4 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கொலையாளிகளான மற்ற 2பேரையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள், பொதுமக்கள், பா.ஜ.க.வினர் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 4 பேர் கொலையை கண்டித்து இன்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதனால் இன்று மதியம் உடல்களை பெற ஒப்புக்கொண்டனர். உடல்கள் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு கள்ளக்கிணறு பகுதிக்குகொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது திடீரென ஆம்புலன்சை சிலர் சிறைப்பிடித்தனர். இறுதி ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென்பதால் ஆம்புலன்ஸ் சிறைப்பிடித்தாக தெரிகிறது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக்கில் விற்க்கப்படும் மதுபான பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பவுச்களை வழங்க வேண்டும்.
- தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமியிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.
பல்லடம்:
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:- தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமியை ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம்.
இதன்படி தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில், பிப்ரவரி 1 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை பணத்தை திருப்பி செலுத்தி, கடன் தள்ளுபடி பட்டியலில் இடம்பெற்று, கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்ற விவசாயிகளுக்கு பணத்தை திருப்பி அளிக்காமல் உள்ளதை, விரைந்து அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கள் இறக்கி விற்க விதித்துள்ள தடையை நீக்க கோரியும், விவசாய விளை நிலங்களில் மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி எறிவதால், கால்களில் காயம் ஏற்படுதல், கால்நடைகள் காயம் படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கடுமையான சிக்கல் உள்ளதால், நிரந்தர தீர்வாக டாஸ்மாக்கில் விற்க்கப்படும் மதுபான பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பவுச்களை வழங்க வேண்டும். பீர் பாட்டில்களுக்கு பதிலாக இரும்பு டின் வடிவத்தில் வழங்க கோரியும் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை முதல்-அமைச்சர் மேம்படுத்தி வருகிறார்.
- அரசால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தாராபுரம் :
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சப்பட்டியில் ரூ.4 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
வேளாண்மைத்துறையில் விவசாயிகளுக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கட்டணம் இல்லாத மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை முதல்-அமைச்சர் மேம்படுத்தி வருகிறார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின் குறுக்கீடு இன்றி நியாயமான விலைக்கு விற்றுப்பயன்பெறுவதற்காகவும் விலை வீழ்ச்சி காலங்களில் விளைபொருட்களைக் கிட்டங்கியில் வைத்து பொருளீட்டுக்கடன் பெற்றுப்பயன்பெறுவதற்காகவும் அரசால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். நெல்லுக்கு கூடுதல் விலையை அறிவித்து மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் அரசை வழிநடத்துகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தாராபுரம் பகுதியில் கிட்டங்கி, பரிவர்த்தனைக் கூடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் தனியார் கிட்டங்கியில் இருப்பு வைத்து வந்தனர். மேலும் அந்த கிட்டங்கிகள் தொலைவில் உள்ளதால் போக்குவரத்து செலவு மற்றும் அதிக வாடகை காரணமாக பொருளாதார இழப்பைச் சந்தித்து வந்தனர். இதனால் முதல்-அமைச்சரால் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். 20 விவசாயிகளுக்கு பவர்டில்லர்களை அமைச்சர் வழங்கினார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன், நகரச் செயலாளர் எஸ்.முருகானந்தம், வி.சி.மகாதேவன், வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், பொறியியல்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், முதுநிலை செயலாளர் (பொறுப்பு) இரா.சுரேஷ்பாபு. மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி, கவுண்டச்சிபுதூர் ஊராட்சி துணைத்தலைவர் நாச்சிமுத்து, 3-வது வார்டு உறுப்பினர் நர்மதா ஈஸ்வரன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
- வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுவதால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
- தொடர் போக்குவரத்து உள்ள இந்த சாலையில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை.
உடுமலை:
உடுமலையில் இருந்து கண்ணம்மநாயக்கனூர் கிராமத்துக்கு செல்வதற்கு பழனியண்டாள்நகர், ஜீவாநகர் ராயல்லட்சுமி நகர் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் இந்த சாலை பிரதானமாகும். இதன் மூலமாக குறுகிய நேரத்தில் குறைவான எரிபொருள் செலவில் உடுமலை நகரத்தை அடைய இயலும். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: - தொடர் போக்குவரத்து உள்ள இந்த சாலையில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை.
இதனால் ஜீவாநகர் தொடக்கத்தில் இருந்து ராயல்லட்சுமி நகர் வரை உள்ள பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து உள்ளது. உடுமலை பிஏபி., கால்வாய் முதல் கண்ணமநாயக்கனூர் கிராமம் வரை உள்ள பகுதி ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுவதால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க முன்வரவில்லை.எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை கடந்து கண்ணமநாயக்கனூர் கிராமத்திற்கு செல்லும் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க முன்வர வேண்டும். அதன் முதல் கட்டமாக சேதம் அடைந்த பகுதியில் மண்ணைக் கொட்டி சமன்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சிவன் தியேட்டர் சாலை மற்றும் குறுக்கு சாலை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பிலும், மாரியம்மன் லே-அவுட் முதல் வீதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டிவெங்கடாசலம், 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் 21-வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, 22-வது வார்டு செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






